முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • உள்ளாட்சி தேர்தல் முடிவு; தடை விதி மறுப்பு

    சென்னை: ஊராகக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரிய மனுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என சட்டப்பஞ்சாயத்து இயகக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    READ MORE
  • குடியுரிமை திருத்த சட்டத்துக்க எதிராக கோலம்

    சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் திமுக சால்பில் கோலம் வரைந்து எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். குடியுரிசை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து கலவரங்கள் மற்றும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து வரும் இந்த போராட்டம், தற்போது தமிழகத்தில் திமுக சார்பில் கோலம் வரைந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை கோபாலபுரத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீடு, ஆழ்வார்பேட்டையில் திமுக தலைவர்

    READ MORE
  • பொங்கலன்று பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை

    சென்னை: வரும் பொங்கலன்று மோடியின் உரையை கேட்க பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஜனவரி 16ம் தேதி பொங்கல் விடுமுறை தினத்தன்று, பிரதமர் மோடி உரையை கேட்க 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. மேலும், அனைத்து மாணவர்களும் தவறாமல் பள்ளிக்கு வருவதை மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், பொங்கல்

    READ MORE
  • 28ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

    சென்னை: தண்ணீர் தட்டுப்பாடு நிலவிவரும் பரபரப்பான சூழ்நிலையில், தமிழக சட்டப்பேரவை வரும் 28ம் தேதி கூடுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் கடந்த 2ம் தேதி கூடியது. ஜனவரி 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. இந்நிலையில், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதிப்பதற்காக இம்மாதம் 28ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது.

    READ MORE
  • மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் துரைமுருகன்..!

    சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக பொருளாளர் துரைமுருகன் இன்று வீடு திரும்பினார். காய்ச்சல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் திமுக பொருளாளர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது சிகிச்சை முடிந்து துரைமுருகன் வீடு திரும்பினார். கடந்த மாதம் 24ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    READ MORE
  • சென்னையில் அடுத்த ஆண்டு நிலத்தடி நீர் இருக்காது..!

    புதுடெல்லி: இந்தியாவின் 21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீரே இருக்காது என நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி, சென்னை, பெங்களூர், ஐதராபாத் உள்ளிட்ட இந்தியாவின் 21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீரே இருக்காது. இதனால், சுமார் 10 கோடி மக்கள் பாதிக்கப்படுவர். வரும் 2030ம் ஆண்டுக்குள் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்கும் குடிநீர் வசதி இருக்காது. எனவே தண்ணீரை மக்கள் வீணாக்காமல் சேமிக்க வேண்டும்.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு