ரயில் தண்ணீரை பயன்படுத்தும் சென்னை வாசிகள்.!

ரயில் தண்ணீரை பயன்படுத்தும் சென்னை வாசிகள்.!

சென்னை:

இந்த வருடம் பருவமழை பொய்த்து போனதால் சென்னை மாநகரத்துக்கு தண்ணீர் சப்ளை செய்யும் ஏரிகள் அனைத்தும் வறண்டு போய் விட்டது. இதனால் சென்னை மாநகரம் தண்ணீர் பஞ்சத்தின் உச்சத்தில் உள்ளது.

சென்னைக்கு ஒரு நாளுக்கு 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது.

இதனால் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் தடுமாறி வருகின்றது. சென்னையில் நிலவும் தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கடந்த 30 வருடங்கள் இல்லாத அளவுக்கு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால் மக்கள் அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

பணம் கொடுத்து தனியாரிடம் தண்ணீர் வாங்க முடியாமல் தினக்கூலித்தொழிலாளர்கள், குறைந்த வருமானம் உடையவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

தண்ணீருக்கு அவர்கள் அரசை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலை தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

தனியாரிடம் அதிக பணம் கொடுத்து தண்ணீர் பெற முடியாதவர்கள் குடிநீர் மற்றும் கழிப்பறை பயன்பாட்டுக்காக வணிக வளாகங்கள், பெரிய அளவிலான பல்பொருள் அங்காடிகள், ரயில் நிலையங்கள், தியேட்டர்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் வாடிக்கையாளர்கள், பயணிகள் போர்வையில் வணிக வளாகங்கள், பல்பொருள் அங்காடிகள், தியேட்டர்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அதிகமானோர் ஏறி, இறங்குவதை காணமுடிகிறது.

ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட ரயில்களில் சிலர் கழிப்பறை தேவைக்காக பயன்படுத்தும் நிலை இருக்கிறது.

இதேபோல தனியார் கம்பெனிகள், நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் சிலர் வேலை நேரம் தொடங்குவதற்கு முன்பே அங்கு சென்று கழிவறை, குளியலறை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்