பனி மூட்டம்; வாகனங்கள் கடும் அவதி

பனி மூட்டம்; வாகனங்கள் கடும் அவதி

ஒசூர்:

ஒசூர் பகுதிகளில் எதிரில் இருப்பவர்கள் தெரியாத அளவிற்கு பனி மூட்டம் நிலவுதால், முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு செல்லும் வாகன ஓட்டிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதிக்கு, குட்டி இங்கிலாந்து என்கிற பெயரும் உண்டு, அதற்கான காரணம் ஒசூர் பகுதி குளிர்ச்சியான பகுதியாகவே காணப்படுவதால் தான்.

எப்போதும் குளிர்ந்த நிலை நிலவினாலும், டிசம்பர் ஜனவரி மாதங்களில் பனிப்பொழிவு அதிகரித்து அதிகப்படியான குளிர்நிலவுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இந்தநிலையில் இன்று அதிகாலை ஒசூர் பகுதிகளில் பனிப்பொழிவு படிப்படியாக அதிகரிக்க தொடங்கியதால் எதிரில் செல்லகுகூடியவர்கள் யார், வந்த வாகனம் வருகிறது என தெரியாதஅளவிற்கு பனிப்பொழிவு இருந்து வருகிறது.

பள்ளி,கல்லூரிகள் விடுமுறை என்றாலும் வேலைக்கு செல்வோர் குளிரை தாங்கி கொள்ள போர்வை ஸ்வேட்டர் உள்ளிட்டவைகளை அணிந்தும், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டும், ஒலி எழுப்பியும் சென்று வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்