நேருக்குநேர் மோதும் பைக்குகள்; shocking video

நேருக்குநேர் மோதும் பைக்குகள்; shocking video

ஒசூர்:

ஒசூர் அருகே, இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிக்கொள்ளும் சிசிடிவி வீடியோ பதிவுகள் பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே பெண்ணங்கூர் என்னுமிடத்தில் சாலையில் அதிவேகமாக வரும் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிக்கொள்ளும் வீடியோ அருகில் உள்ள எரிப்பொருள் நிரப்பும் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.

வாகனங்கள் மோதிக்கொள்ளும் வீடியோவினை பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் வீடியோ அமைந்திருக்கிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்