முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி, ஒன்றியகுழு தலைவர் தொடங்கி வைத்தார்

    ஒசூர் அருகே தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார் ஒன்றியகுழு தலைவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் – பாகலூர் மாநில நெடுஞ்சாலை சமத்துவபுரம் முதல் அனுமந்தபுரம் கிராமம் வரையிலான மண்சாலை குண்டும் குழியுமாக இருந்து வந்ததால் மண்சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டுமென தமிழக அரசிற்கு அப்பகுதியினர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று காலை ஒசூர் ஒன்றிய குழு தலைவர் சசி வெங்கடசாமி அவர்கள் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின்

    READ MORE
  • நாசா விண்வெளி மாநாட்டில் பங்கேற்கும் திருச்சி மாணவி..!

    திருச்சியைச் சேர்ந்த மாணவி காயத்ரி நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்குச் செல்லவுள்ளார். திருச்சி மாவட்டம், உறையூா் பாத்திமா நகரைச் சோந்தவர் காயத்ரி. திருச்சி சமயபுரத்தில் உள்ள கே.ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் இசிஇ இறுதியாண்டு படித்து வருகிறார்.   இவர் கடந்த ஜனவரி மாதம் ஆஸ்ட்ரோ நெட் மற்றும் கோ 4 குரு ஆகிய நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் நடத்திய தகுதித் தோவில் சிறந்த திறனாளா் என்று தேர்வாகியுள்ளார். கல்லூரி மாணவர்களுக்கான இந்தத் தேர்வில், தரவரிசை (கிரேட்) அடிப்படையில்

    READ MORE
  • கலைஞர் காத்திருந்தாரு, ஸ்டாலின் வீட்டுக்கே வந்தாரு. இவங்கள நம்பி போனோம் இப்போ என்ன ஆச்சு? அக்காவிடம் புலம்பிய சுதீஷ்..

    இந்தவாட்டி எப்படியாவது டெல்லிக்கு போயிடலாம் என சுதீஷ் கண்டா கனவில், நேற்று மண்ணை வாரி போட்டது அதிமுக. இதனால் நொந்து போன தம்பியை ஆறுதல்படுத்தியுள்ளார் தனது அக்கா. பாமகவுக்கு மாட்டு ராஜ்யசபா சீட் கொடுத்தீங்க எங்களுக்கும் ஒன்னு குடுங்க என ஓபிஎஸ்,இபிஎஸ்ஸை இரண்டுவாட்டி சந்தித்தார் சுதீஷ். நேரடியாக சென்று கேட்டதால் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் இருப்பதாலும், அடுத்த வருஷ சட்டசபை தேர்தல் இருப்பதாலும் எப்படியும் நமக்கு சீட் கெடைச்சிடும் என கனவு கண்டு கொண்டுருந்தார் சுதீஷ்.

    READ MORE
  • ‘‘நாடாளுமன்றத்தில 3வது பெரிய கட்சி’’ – ஸ்டாலின் அறிக்கை

    சென்னை: வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வெற்றிபெற்றதற்கு மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றியின் மூலம் நாடாளுமன்றத்தில் 3வது பெரிய கட்சியாக திமுக என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. வெற்றியைச் சாத்தியமாக்கிய வேலூர் வாக்காளர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும் நன்றி. தி.மு.க.வின் வெற்றியை தாமதப்படுத்தினாலும் தடுக்க முடியாது என்பது உறுதிப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

    READ MORE
  • ‘‘அதிமுக முன்னிலை வகிப்பது மகிழ்ச்சி’’ – ராஜேந்திர பாலாஜி

    சென்னை: வேலூர் தொகுதியில் அதிமுக முன்னிலை வகிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், வேலூர் மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கையில், தற்போதைய நிலவரப்படி அதிமுக முன்னிலை வகிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. சிறுபான்மையினர் உட்பட்ட அனைத்து சமுதாயத்தினரும் அதிமுகவுக்கு வாக்களித்துள்ளனர் என்பது தெரியவருகிறது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி, அதிமுகவின் ஏ.சி.சண்முகம் 2,45,273 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். திமுகவின் கதிர் ஆனந்த் 2,41,377 வாக்குகள்

    READ MORE
  • அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார் ஆந்திரா விரைவு

    சென்னை: சென்னையின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நீர் திறக்க, ஆந்திர முதல்வரை சந்திக்க அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார் ஆந்திரா சென்றுள்ளனர். சென்னையில் கடந்த சில மாதங்களாக கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதையடுத்து, ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டுசெல்லப்பட்டது. இந்நிலையில், தற்போது சென்னையின் குடிநீர் தேவைக்காக, கிருஷ்ணா நதியில் நீர் திறப்பது குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்திக்க அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார் ஆந்திரா சென்றுள்ளனர்.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு