முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • தாளவாடி மலைப்பகுதி கல்குவாரியில் சிறுத்தை பதுங்கி உள்ளதா? ஆளில்லா விமானம் மூலம் தேடும் பணி தீவிரம்

    தாளவாடி மலைப்பகுதியில் உள்ள கல்குவாரியில் சிறுத்தை பதுங்கி உள்ளதா? என ஆளில்லா விமானம் மூலம் தேடும் பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கின்றன. கடந்த சில மாதமாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதோடு வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்து விவசாயிகள் வளர்த்து வரும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை அடித்துக்கொல்லும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. வனத்துறையினரும் சிறுத்தை

    READ MORE
  • ஏப்ரல் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு:  தமிழக அரசு அறிவிப்பு

    தமிழகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே, தேசிய மக்கள்

    READ MORE
  • கஞ்சா பயன்படுத்துவது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததால் கைதிகளுக்குள் பயங்கர மோதல்

    சென்னை புழல் மத்திய சிறைச்சாலையின் விசாரணை பிரிவில் சுமார் 1,800க்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்கு கஞ்சா, குட்கா உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்கள் மற்றும் செல்போன் நடமாட்டம் தொடர்பாக இங்குள்ள ஒருசில கைதிகள் போலீசாருக்கு தகவல் தெரிவிப்பது வழக்கம். இதனால், கைதிகளிடையே அடிக்கடி அடிதடி தகராறு நடைபெற்று வந்தது. இந்நிலையில், சென்னை குரோம்பேட்டை அடுத்த நாகல்கேணி, பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த டேவிட் (எ) பில்லா (24) என்பவர் கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம்

    READ MORE
  • அத்திவரதருக்காக முறையீடு

    சென்னை: அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்க் நீட்டிக்க, பொதுநல மனு தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் நடைபெறும் அத்திவரதர் வைபத்திற்கு, ஜூலை, 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். முதலில் சயன கோலத்திலும், ஆகஸ்ட் 1முதல் நின்ற கோலத்திலும் அருள்பாலிக்கிறார். இந்த தரிசனம் வரும் 16ம் தேதியோடு முடியும் நிலையில், அனந்தசரஸ் குளத்திற்கு அத்திவரதரை எடுத்துச் செல்ல, 17ம் தேதி ஏற்பாடு செய்யப்படும். பக்தர்கள் தரிசனம்

    READ MORE
  • ஜெயலலிதா பெயரில் விருது

    சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் கலைமாமணி விருது வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மூத்த கலைஞர்களுக்கான உதவித்தொகை ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் எனவும், கலைமாமணி விருது 3 சவரனுக்கு பதிலாக, 5 சவரன் உயர்த்தி வழங்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

    READ MORE
  • பெண்கள் பாதுகாப்புக்கு ‘பிங்க்’

    சென்னை: சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தவிர்க்க, புதிய காவல் ரோந்து வாகனம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அந்த வழக்குகளை விசாரிக்க தமிழக காவல் துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தப்பிரிவு கூடுதல் டிஜிபி ரவி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் காவல் நிலையங்களுக்கென ‘பிங்க்’ ரோந்து வாகனங்கள் வழங்கப்பட உள்ளன. ‘பிங்க்’

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு