முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • தமிழ் தெரியாதவங்களுக்கு எல்லாம் டாக்டர் பட்டமா? குஷ்புவை கிண்டல் செய்கிறாரா கஸ்தூரிதமிழ் தெரியாதவங்களுக்கு எல்லாம் டாக்டர் பட்டமா? குஷ்புவை கிண்டல் செய்கிறாரா கஸ்தூரி

    சமீபத்தில் நடிகை குஷ்புவுக்கு அவரது திரையுல சாதனைக்காக அமெரிக்காவில் உள்ள உலக தமிழ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: டாக்டர் பட்டம் வாங்குறது பெரிய கவுரவம்னு நினைச்சேன்.. அட பாவிங்களா, மெய்யாலுமே ” வாங்குறது’ தானா !!! பள்ளி படிப்பை முடிக்காதவங்க, தமிழ் தெரியாதவங்க எல்லாருக்கும் டாக்டர் ஆஃப் லெட்டர்ஸா !!! என்னடா இது டாக்டர் பட்டத்துக்கு வந்த சோதனை அதுவும் இந்த பல்கலைக்கழகம் எல்லாம் ஊரும் தெரியலை,

    READ MORE
  • தமிழக பாஜ தலைவராக நியமனம்: எல்.முருகனுக்கு வாசன் வாழ்த்து

    தமிழக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக பாஜ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எல்.முருகனுக்கு தமாகா சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் பாஜவில் உறுப்பினரானது முதல் தொடர்ந்து கடின உழைப்பை மேற்கொண்டு படிப்படியாக பல்வேறு பொறுப்புகளில் சிறந்து விளங்கி இப்போது தலைமைப் பொறுப்பில் இடம் வகிப்பது பாராட்டுக்குரியது. தமிழக பாஜ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எல்.முருகனின் கட்சிப் பணியும், மக்கள் பணியும் சிறக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    READ MORE
  • திருச்சியில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி மாரடைப்பால் மரணம்

    ரஜினி ரசிகர் மன்ற பாபா முருகேஷ் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் ரஜினி காந்த் தனது அரசியல் வருகை எப்படி இருக்கும் என்பது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், திமுக அதிமுகவிற்கு எதிராக தமிழகம் முழுவதும் மக்களிடையே எழுச்சி ஏற்பட வேண்டாம் . அப்படி ஒரு எழுச்சியை கண்டால் அரசியலுக்கு வருவதாக தெரிவித்தார். அத்துடன் முதல்வர் பதவிக்கு ஆசைப்படவில்லை என்றும் கட்சி ஒரு தலைமை, ஆட்சி

    READ MORE
  • ஜெ. இருந்திருந்தால் நான் அமைச்சர்

    சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தற்போது உயிருடன் இருந்திருந்தால், தன்னை அமைச்சராக்கியிருப்பார் என்று கருணாஸ் எம்.எல்.ஏ., பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார். தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்து வந்த மணிகண்டனின் பதவி பறிக்கப்பட்டுவிட்டது. முதல்வராக பதவியேற்ற 2 ஆண்டுகளில் முதல் முறையாக அமைச்சர் ஒருவர் நீக்கப்பட்டுள்ளார். இதற்கு காரணங்களாக இரண்டு விஷயங்கள் கூறப்படுகிறது. அதாவது ஒன்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை விமர்சித்து பேசியது மற்றொரு மணிகண்டன் குறித்து கருணாஸ் எம்எல்ஏ புகார் மனு. ராமநாதபுரத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகளை

    READ MORE
  • செல்போன் பறித்த காதல் ஜோடி

    சென்னை: சென்னை, தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் லிப்சா, இவர் கடந்த 12ம் தேதி தி.நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் லிப்சாவின் செல்போனை பறித்து சென்றுள்ளனர். இதனையடுத்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் லிப்சா புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் மூலம் செல்போன் பறிக்க பயன்படுத்திய பல்சர் பைக்கின் நம்பர் பிளேட்டை வைத்து விசாரணை

    READ MORE
  • மேலும் 4 பொதுச்செயலர்கள்

    சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மேலும் 4 பொதுச்செயலாளர்களை நியமனம் செய்து கட்சித் தலைவர் கமல்ஹாசன் உத்தரவிட்டுள்ளார். பொதுச்செயலாளர்களாக ஏஜி.மௌர்யா, வி.உமாதேவி, ஆர்.ரங்கராஜன், பஷீர் அகமது நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கட்சியின் பொதுச்செயலராக ஏற்கனவே அருணாச்சலம் என்பவர் உள்ள நிலையில் மேலும் 4 பேரை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு