முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு; 50,000 இலவச விவசாய மின் இணைப்பு;  சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணி அறிவிப்பு

    டாஸ்மாக் பணியாளர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.500 உயர்த்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊதிய உயர்வால் 6,193 மேற்பார்வையாளர்கள், 15,347 விற்பனையாளர்கள், 3,437 உதவி விற்பனையாளர்கள் பயன்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.15.42 கோடி கூடுதல் செலவாகும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த தொகுப்பு ஊதியம் 2020 ஏப்ரல் முதல் வழங்கப்படும் தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார். டாஸ்மாக்கில் பணியாற்றும் பணியாளர்கள் 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 10 மண்டலங்களில்

    READ MORE
  • மது பாட்டிலில் இனி.. ‘மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’ இருக்காது.. என்ன எழுதுகிறார்கள் தெரியுமா?

    மதுபாட்டிலில் உள்ள ‘ மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு’ என்ற வாசகத்தை தமிழக அரசு மாற்ற முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் பட்டிதொட்டியெல்லாம் மதுக்கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் மதுபான கடைகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்புமே பாரபட்சமின்றி குவிகிறது. 2010ம் ஆண்டு, சாலை விபத்துக்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1.34.000, தினமும் 336 பேர் விபத்துகளில் மரணமடைந்தனர். மது மற்றும் போதைமருந்து தகவல் மையத்தின் ஆய்வுப்படி, 40 % சாலை விபத்துக்கள் குடிபோதையினால் ஏற்பட்டுள்ளது.

    READ MORE
  • ரஜினி சொன்னா நிச்சயம் பலிக்கும்… அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பிரேமலதா..!

    ரஜினி கூறும் அரசியல் மாற்றம் நிச்சயம் 2021 சட்டமன்றத் தேர்தலில் நடக்கும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது தனது அரசியல் கண்ணோட்டம் குறித்து சில கருத்துகளை தெரிவித்தார். குறிப்பாக ஆட்சிக்கு ஒரு தலைமை கட்சிக்கு ஒரு தலைமை என்றும் தான் கட்சிக்கு மட்டும் தலைமை பொறுப்பில் இருந்து வழிகாட்டியாக இருக்கப் போவதாகவும் முதலமைச்சர் பதவிக்கு வேறு ஒருவரை தேர்ந்தெடுக்க போவதாகவும் கூறினார். ரஜினியின் இந்த கருத்தை அவரது ரசிகர்கள் ஏற்றுக்

    READ MORE
  • தங்கம் சவரன் ரூ.320 உயர்வு

    சென்னை: தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டுவந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. சென்னையில் தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே இருந்து வந்தது. நேற்று தங்கத்தின் விலை ரூ.400 வரை குறைந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.320 அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை கிராமுக்கு 3,618 ஆக உயர்ந்து, சவரன் 28,944 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சர்வதேச அளவில் உலக நாடுகளில் வங்கிகள் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளதாகவும், தங்க இறக்குமதிக்கான வரி 10 சதவீதத்திலிருந்து 12.5

    READ MORE
  • முதியோருக்கு விருது வழங்கிய முதல்வர்

    சென்னை: நெல்லையில் முகமூடி கொள்ளையர்களை துணிச்சலோடு விரட்டியடித்த சண்முகவேலு-செந்தாமரை என்ற முதியோர் தம்பதிக்கு அதீத துணிவுக்கான விருதை சுதந்திர தினவிழாவில் முதல்வர் வழங்கினார். மீன்வளத்துறை உதவி இயக்குநர் ரம்யா லஷ்மிக்கு ‘கல்பனா சாவ்லா’ விருதும், சென்னை காவல் ஆணையரகம், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை, வணிகவரித்துறைக்கு ‘முதல்வர் நல ஆளுமை விருது’ வழங்கப்பட்டது. சென்னை மாநகராட்சிக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகளையும் முதலமைச்சர் வழங்கினார். மகளிர்

    READ MORE
  • நீலகிரிக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு

    சென்னை: நீலகிரி மாவட்ட வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மற்றும் கோயமுத்தூர் மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ள சேதம் குறித்த மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நீலகிரி மாவட்ட வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த நிதி,

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு