முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • திருப்புத்தூர் அருகே மஞ்சுவிரட்டில் முதியவர் பலி

    சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே நெடுமரம் புதூரில் வெள்ளாலக்கருப்பர் கோயில் மாசித்திருவிழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 178 காளைகள் பங்கேற்றன. காளைகளை பிடித்த வீரர்களுக்கும், சிக்காத காளையின் உரிமையாளர்களுக்கும் அண்டா பரிசாக வழங்கப்பட்டது.முன்னதாக திருப்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 300 காளைகள் ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டன. இதை அப்பகுதியில் கூடியிருந்த வீரர்கள் பிடித்தனர். இதில் மஞ்சுவிரட்டை பார்த்து கொண்டிருந்த வெள்ளைக்கண்ணு (80) காளை முட்டி உயிரிழந்தார்.

    READ MORE
  • தமிழகத்தில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு விடுமுறை; கேரளா ஒட்டியுள்ள மாவட்டங்களில் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை

    தமிழகத்தில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு மார்ச் 31-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 16-ம் தேதி முதல் 31-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் 5-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரியில் 5-ம் வகுப்பு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    READ MORE
  • சபை நாகரிகம் குறித்து துரைமுருகன் விளக்கம்

    சட்டப் பேரவையில் எரிசக்தி துறை மற்றும் ஆயத்தீர்வை மீதான மானியக் கோரிக்கை நேற்று நடந்தது. உறுப்பினர்கள் பலர் அதுகுறித்து கேள்வி எழுப்பி பேசினர். இதையடுத்து மாலை 3.30 மணி அளவில் அமைச்சர் தங்கமணி, உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அதற்கு பிறகு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பேசியதாவது:துரைமுருகன்: அமைச்சர் பேசும் போது கூறினார், 10வது முறையாக மானியக் கோரிக்கை மீது பேசுவதாக தெரிவித்தார். 10ஆண்டுகளாக அமைச்சராக இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா, யானையை கட்டி தீனி

    READ MORE
  • சென்னையில் 1 கோடி லிட்டர் குடீநீர் சப்ளையா?

    சென்னை: சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதை தொடர்ந்து காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து தினமும் 1 கோடி லிட்டர் குடிநீரை ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. இதன்படி முதல் ரயில் ஜூலை 12ம் தேதி ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்டது. 50 வேகன்கள் கொண்ட சிறப்பு ரயிலில் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகு கூடுதலாக மற்றொரு ரயில் இயக்கப்பட்டு மேலும் 25 லட்சம் லிட்டர் குடிநீர் அனுப்பப்பட்டது.

    READ MORE
  • ராஜ்பவனில் தேநீர் விருந்து

    சென்னை: நாட்டின் 73வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து அளிக்கிறார். சுதந்திர தினத்தன்று வழக்கமாக நடைபெறும் இந்த தேநீர் விருந்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

    READ MORE
  • சமபந்தி விருந்தில் முதல்வர்

    சென்னை: சென்னையில் நடைபெற்ற சமபந்தி பொதுவிருந்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டார். நாட்டின் 73வது சுதந்திர தினத்தைமுன்னிட்டு, சென்னை திருவான்மையூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவிலில் சமபந்தி பொது விருந்து நடைபெற்றது. இந்த பொது விருந்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு மக்களோடு மக்களாக உணவு சாப்பிட்டார்.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு