திருச்சியில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி மாரடைப்பால் மரணம்

திருச்சியில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி மாரடைப்பால் மரணம்

ரஜினி ரசிகர் மன்ற பாபா முருகேஷ் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் ரஜினி காந்த் தனது அரசியல் வருகை எப்படி இருக்கும் என்பது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், திமுக அதிமுகவிற்கு எதிராக தமிழகம் முழுவதும் மக்களிடையே எழுச்சி ஏற்பட வேண்டாம் . அப்படி ஒரு எழுச்சியை கண்டால் அரசியலுக்கு வருவதாக தெரிவித்தார். அத்துடன் முதல்வர் பதவிக்கு ஆசைப்படவில்லை என்றும் கட்சி ஒரு தலைமை, ஆட்சி ஒரு தலைமை என இருக்கும் என்றும் கூறினார்.

ரஜினியின் அரசில் பேட்டி தான் இன்றைக்கு பெரும் விவாதமாக இருந்தது அனைத்து செய்தி தொலைக்காட்சிகள் , சமூக ஊடகங்களில் ரஜினியின் பேச்சு தான் பிரதானமாக விவாதிக்கப்பட்டத.இந்த நிலையில் திருச்சி அடுத்த மணப்பாறையில் டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக பணிபுரிந்தவர் பாபா முருகேஷ் ( வயது 52) . இவர் மணப்பாறை நகர ரஜினி மக்கள் மன்றம் துணைச் செயலாளராக பதவி வகித்தார்

ரஜினியின் தீவிரமான ரசிகரான பாபா முருகேஷ், ரஜினியின் அரசியல் வருகை குறித்து மிகவும் ஆர்வமுடன் இருந்தார். இந்நிலையில் பாபா முருகேசன் திருச்சியில் உள்ள அவரது வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதற்காக மணப்பாறைக்கு இருசக்கர வாகனத்தில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது நாய் ஒன்று குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். காயம்அடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். இந்நிலையில் பாபா முருகேசன் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார் இவரது மரணம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்