முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • மக்களிடம் குறை எதுவும் இல்லை: நடிகர் ரஜினி பாஜகவில் இணைய வேண்டும்…பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

    மக்களிடம் ஏற்கனவே எழுச்சி இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினி தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதன்பின் சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த தனது அரசியல் பிரவேசம் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, அரசியலுக்கு வர உள்ளதை அறிவித்த பிறகு தமிழகத்தில் சிஸ்டம் சரி இல்லை என்று கூறினேன்.சிஸ்டத்தை மாற்றாமல் அரசியலுக்கு வருவது மீன் குழம்பு வைத்த

    READ MORE
  • ராமநாதபுரம் அருகே கூலிப்படையால் மீனவா் கொலை : கிராம மக்கள் மறியல்

    ராமநாதபுரம் அருகே கூலிப்படையால் மீனவா் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டாா். இதைத்தொடா்ந்து, குற்றவாளிகளை கைது செய்யக் கோரி மீனவ கிராம மக்கள் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் அருகே உள்ள சின்னஏா்வாடியைச் சோந்த முனியசாமி மகன் குமாா் (43). மீன் வியாபாரம் செய்து வந்தாா். மீனவா் கூட்டுறவு சங்க உறுப்பினராகவும் இருந்தாா். அப் பகுதியில் மீனவா்கள் தொடா்பான பிரச்னைகள் குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் அடிக்கடி குமாா் பேசிவந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை காலையில் தனது இருசக்கர வாகனத்தில் மீன்வளத்துறை

    READ MORE
  • தான் பெற்ற  குஞ்சுகளைக் காப்பாற்ற விஷம் கொண்ட  வெள்ளை நாகத்தையே எதிர்க்கும் அணில்

    தாய் அணில் ஒன்று தனது குஞ்சுகளைக் காப்பாற்ற பாம்புடன் சண்டையிடும் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டு வருகின்றது. தாயின் அன்பு எல்லையற்றது. கடைசி மூச்சு உள்ளவரை தளராதது என்பதற்கு மிக சிறந்த எடுத்து காட்டு இந்த காட்சி . தாயின் வலிமையை உணர்த்தும் விதமாக இந்த சண்டை காட்சிகள் இடம்பெற்றுள்ளன .

    READ MORE
  • தரிசனத்தை நீட்டிக்க முடியாது

    சென்னை: அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வரும் 16ம் தேதியுடன் முடிவடையும் அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்கக்கோரி, ஸ்ரீவைஷ்ணவ ராமானுஜ சபா தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், அத்திவரதர் தரிசனத்தை நீட்டிப்பது பற்றி அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றும், தரிசனத்தை நீட்டிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    READ MORE
  • தமிழக அரசு தோல்வி.. அழகிரி குற்றச்சாட்டு

    சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நடைபெற்று வருகிற அ.தி.மு.க. அரசு மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை இல்லாத காரணத்தால் எதிர்பார்த்த முதலீடுகள் வரவில்லை. தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று தொழிலதிபர்களை அழைத்து பேசி, அதிக முதலீடுகளை பெறப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது என்ன பலனை கொடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நீலகிரி மாவட்டமே வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனை கண்டவுடன்

    READ MORE
  • குறைந்தது தங்கம் விலை

    சென்னை: தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தநிலையில் தற்போது குறைந்துள்ளது. சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.51 குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.408 குறைந்து ரூ.28,608க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று சற்று குறைந்துள்ளது.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு