முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • வாளையார் அருகே 24 காட்டுப்பன்றிகள் ரயிலில் அடிபட்டு பலி

    கேரள-தமிழக எல்லையான வாளையார் அருகே தண்டவாளத்தை கடந்த காட்டுப்பன்றிகள் கூட்டத்தின் மீது ரயில் மோதியதில் 24 பன்றிகள் ஒரே நேரத்தில் உயிரிழந்தன. கேரள-தமிழக எல்லை வாளையார் ரயில் நிலையம் அருகே அடர்ந்த வனப்பகுதி உள்ளது. யானைகள் நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில் அடிக்கடி தண்டவாளத்தை கடக்க முற்படும் யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பது வழக்கம். இதையடுத்து வன உயிரின ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று இப்பகுதியில் இரவு நேரத்தில் இயங்கக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டது. இருப்பினும் இரை, தண்ணீர்

    READ MORE
  • தியாகரசனப்பள்ளி எருதுவிடும் விழா

    ஒசூர் அருகே கிராம திருவிழாவினை முன்னிட்டு நடைப்பெற்ற எருதுவிடும் விழாவில் 300 எருதுகள் சீறி பாய்ந்தன, பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் கண்டுகளிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரி அருகே தியாகரசனப்பள்ளி என்னும் கிராமத்தில் பாரம்பரியமிக்க எருதுவிடும் விழா நடைப்பெற்றது. மாரியம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு நடைப்பெற்ற எருதுவிடும் விழாவில் 500 க்கும் அதிகமான மாடு,காளைகளும், 300 க்கும் அதிகமான எருதுப்பிடி வீரர்கள் பங்கேற்றனர் சூளகிரி,பேரிகை,சாமல்பள்ளம்,உத்தனப்பள்ளி பகுதிகளிலிருந்து வந்த காளைகள், மாடுகள் மருத்துவ பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டன. காலை

    READ MORE
  • தேனி ஆவின் தலைவராக ஓபிஎஸ் தம்பி தேர்வு

    தேனி ஆவின் நிர்வாகக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் நேற்று நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு ஓ.ராஜாவும், துணைத்தலைவர் பதவிக்கு முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் செல்லமுத்துவும் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக ஓ.ராஜா பதவியேற்றதும், கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்கள் தங்களது வளர்ப்பு கறவை மாடுகளுக்கு கலப்பு தீவனம் வாங்க கிலோ ஒன்றுக்கு 3 மானியம் வழங்கப்படும் என அறிவித்தார்.

    READ MORE
  • தமிழக மக்கள் புலிகளை போன்றவர்கள் -மம்தா

    சென்னை: தமிழக மக்கள் புலிகளை போன்றவர்கள் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கருணாநிதியின் சிலை திறப்புவிழா நிகழ்ச்சியில் ஒய்எமசிஏ திடலில் நடைபெற்றது. இதில் பேசிய மம்தா பானர்ஜி, கருணாநிதி நினைவு விழாவில் அனைவருக்கும் வணக்கம் என தமிழில் பேச்சை தொடங்கினார். கருணாநிதியை யாரும் மறந்துவிட முடியாது. காரணம் அவரது செயல்பாடுகள். தமிழக மக்களை எனக்கு மிகவும் பிடிக்கும், மாநில உரிமையை விட்டுக் கொடுக்காத மக்கள். புலிகளை போன்றவர்கள். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு அடையாளம்

    READ MORE
  • கருணாநிதி சிலையை திறந்துவைத்தார் மம்தா

    சென்னை: சென்னையில் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் சிலையை மம்தா பானர்ஜி திறந்து வைத்தார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் சிலையை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று திறந்து வைத்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த சிலை திறப்பு விழாவில் ஏராளமான திமுக தலைவர்கள் கலந்துகொண்டனர்.

    READ MORE
  • சென்னை ரயிலில் கத்திகளுடன் மோதிக்கொண்ட மாணவர்கள்

    சென்னை: சென்னை அடுத்த பெரம்பூரில் பயணிகள் ரயிலில் கல்லூரி மாணவர்கள் இடையே நடைபெற்ற மோதலில் பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த பயணிகள் ரயிலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், மாநில கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. ரயில் பெரம்பூர் கேரேஜ் ரயில் நிலையத்துக்கு வந்தபோது மாணவர்கள் கத்தியால் பயங்கரமாக ஒருவர் மீது ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் ரயில் பயணி ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் நடைமேடையில் இருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இது

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு