முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • ஒன்றிணையுங்கள் திமுக நட்புகளே! – இதுவும் பிரசாத் கிஷோர் ஐடியாவா?

    திமுகவில் உள்ளவர்களையும், புதிதாக இணைபவர்களையும் சமூக வலைதளங்கள் மூலம் ஒன்றிணைக்கும் பணியை திமுகவினர் தொடங்கியுள்ளனர். எதிர்வரும் 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக திமுக பல வழிகளிலும் தயாராகி வருகிறது. இந்த முறை ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் உள்ள திமுக, இதற்காக அரசியல் ஆலோசகர் பிரசாத் கிஷோர் போன்றவர்களையும் நியமித்துள்ளது. திமுக தனது கட்சி தொடர்பான தகவல்களையும், செய்திகளையும் மக்களோடு பகிர்ந்து கொள்ள இன்றைய தலைமுறையில் சமூக வலைதளங்கள் பெரும் பங்காற்றுவதை உணர்ந்துள்ளது. அதனால் திமுகவில்

    READ MORE
  • “ஊர் கூடி, தேர் இழுத்த” ஒசூர் மலைக்கோவில் திருவிழா

    ஒசூரில் பிரசித்தி பெற்ற மரகதாம்பிகை உடனுரை சந்திரசூடேஷ்வரர் கோயில் தேர்திருவிழா : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த மரகதாம்பிகை உடனுரை சந்திரசூடேஷ்வரர் தேர்திருவிழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் ஒசூர் கோட்டாட்சியர் குமரேசன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். ஆண்டுதோறும் மாசி மாதம் நடைப்பெறும் திருவிழாவில் தமிழகம்,கர்நாடகா ஆந்திரா ஆகிய அண்டை மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு

    READ MORE
  • தேர்தலில் அதிமுக தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டுமானால் பாஜக உறவை மறுபரிசீலனை செய்யவேண்டும்: தொல். திருமாவளவன்

    எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தன்னை தற்காத்து கொள்ள வேண்டுமானால் பாஜகவுடனான உறவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் தமுமுக சார்பாக குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மாநாடு நேற்று மாலை நடைபெற்றது. மாநாட்டிற்கு ராமநாதபுரம் மாவட்ட தமுமுக தலைவர் முகமது இக்பால் தலைமை தாங்கினார். தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், மதுரை எம்.பி வெங்கடேசன், ராமநாதபுரம் எம்.பி

    READ MORE
  • ஐஏஎஸ் அதிகாரிகள் 4 பேர் இடமாற்றம்

    சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் 4 பேரரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீட்டு வசதித் துறை முதன்மை செயலராக ராஜேஷ் லக்கானி, சுற்றுலாத்துறை இயக்குனராக அமுதவள்ளி, நகர மற்றும் ஊரக திட்ட இயக்குனராக சந்திரசேகர் சாகாமுரி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனராக மதிவாணன் ஆகியோரை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    READ MORE
  • கருணாநிதி சிலை திறப்புக்கு மம்தா வருகை

    சென்னை: கருணாநிதியின் சிலை திறப்புவிழாவில் பங்கேற்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்னை வந்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் சிலை சென்னையில் உள்ள முரசொலி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் நினைவுநாளான ஆகஸ்ட் 7ம் தேதி (நாளை) இந்த சிலையை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைக்கிறார். இதற்காக இன்று சென்னைக்கு வந்த மம்தா பானர்ஜியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இந்நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பிணராய் விஜயன் மற்றும்

    READ MORE
  • துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு

    சென்னை: வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழக துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் டிக்ஹாவிற்கு 130 கி.மீ தொலைவில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து ஒடிசாவை ஓட்டியுள்ள பகுதியில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் சின்னம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் மழை

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு