தியாகரசனப்பள்ளி எருதுவிடும் விழா

தியாகரசனப்பள்ளி எருதுவிடும் விழா

ஒசூர் அருகே கிராம திருவிழாவினை முன்னிட்டு நடைப்பெற்ற எருதுவிடும் விழாவில் 300 எருதுகள் சீறி பாய்ந்தன, பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் கண்டுகளிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரி அருகே தியாகரசனப்பள்ளி என்னும் கிராமத்தில் பாரம்பரியமிக்க எருதுவிடும் விழா நடைப்பெற்றது.

மாரியம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு நடைப்பெற்ற எருதுவிடும் விழாவில் 500 க்கும் அதிகமான மாடு,காளைகளும், 300 க்கும் அதிகமான எருதுப்பிடி வீரர்கள் பங்கேற்றனர்

சூளகிரி,பேரிகை,சாமல்பள்ளம்,உத்தனப்பள்ளி பகுதிகளிலிருந்து வந்த காளைகள், மாடுகள் மருத்துவ பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டன.

காலை 9 மணிக்கு தொடங்கிய எருதுவிடும் விழா மதியம் 12 மணிவரை வெகு விமர்சையாக நடைப்பெற்றது, சீறி வந்த காளைகளை இளைஞர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு அடக்கினர்.

ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள், எருதுவிடும் விழா ஆர்வலர்கள் பங்கேற்ற எருதுவிடும் விழாவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது

மாடுகள் முட்டி காயமடைந்த வர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்னர்

சூளகிரி போலிசார் அசம்பாவிதங்களை தடுக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்