முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • திமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களா? பரபரப்பு தகவல்

    திமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களா? தமிழகத்தில் வரும் 26-ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து திமுக, அதிமுக வேட்பாளர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே. இதில் திமுக வேட்பாளர்களான திருச்சி சிவா, செல்வராஜ் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். திமுக வேட்பாளர்கள் மூவரும் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் இருந்து அவர்களுடைய சொத்துக்கள் குறித்த விவரங்கள் தெரிய வந்துள்ளது. குறிப்பாக மூவருமே கோடீஸ்வரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுடைய சொத்துக்களை விபரம்

    READ MORE
  • மாநிலங்களவை எம்பி பதவிக்கு வேட்பாளர்கள் அறிவித்ததில் அதிமுக மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி

    ஒரே மாவட்டத்தை சேர்ந்த 2 பேருக்கு பதவி தேர்தலில் தோற்றவர்களுக்கு மீண்டும் சீட் சென்னை: மாநிலங்களவை எம்பி பதவிக்கு அதிமுக வேட்பாளர்கள் 3 பேரின் பெயரை அதிமுக தலைமை நேற்று முன்தினம் அறிவித்தது. ஒரே மாவட்டத்தை சேர்ந்த தம்பிதுரை, கே.பி.முனுசாமி ஆகியோருக்கு பதவி வழங்கியதால் அதிமுக மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு எம்பியாக தேர்வு செய்யப்பட்ட திருச்சி சிவா, டி.கே.ரங்கராஜன், சசிகலா புஷ்பா, விஜிலா சத்யானந்த், செல்வராஜ், முத்துக்கருப்பன் ஆகிய 6

    READ MORE
  • குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்கள் மட்டும் பாதிக்கப்பட போவதில்லை: ஏழைகளும் பாதிக்கப்படுவார்கள்: சிஏஏ எதிர்ப்பாளர்கள் கூட்டாக பேட்டி

    சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்கள் மட்டும் பாதிக்கப்பட போவதில்லை ஏழைகளும் பாதிக்கப்படுவார்கள் என சிஏஏ எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். கேரளா, ராஜஸ்தான், புதுவை உள்பட 13 மாநிலங்களில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதேபோல் தமிழகத்தில் இச்சட்டங்களை அமல்படுத்த மாட்டோமென சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், இச்சட்டம் தொடர்பாக நடந்த சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் தர்ணா, மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு

    READ MORE
  • காங்கிரசால் நான் எம்.பி. ஆகவில்லை.. அழகிரிக்கு வைகோ கண்டனம்

    சென்னை: ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் காங்கிரசை குறை சொல்வதா? என மதிமுக தலைவர் வைகோவுக்கு காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்தார். இவரது கருத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதிலடி கொடுத்துள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களால் நான் எம்.பி ஆகவில்லை என ஆவேசமாக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஸ்டாலின் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களால் தான் நான் எம்.பி. ஆனேன். ஏற்கனவே 3 முறை மாநிலங்களவை எம்.பி. ஆனதும் கருணாநிதியால்தான். காங்கிரசின் தயவால் தான்,

    READ MORE
  • எங்கள் தயவில் எம்.பியான வைகோ.. இளங்கோவன் கண்டனம்

    சென்னை: காங்கிரஸ் தயவில் எம்.பியாக தேர்வான வைகோ எங்களை விமர்சனம் செய்யலாமா என்று முன்னாள் அக்கட்சியின் தலைவர் இளங்கோவன் விமர்சனம் செய்துள்ளார். காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கம் குறித்த விவாதத்தில் மதிமுக எம்பி வைகோ காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்து இருந்தார். இதற்கு தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இது பற்றி ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தனது பேட்டியில் கூறியிருப்பதாவது: மதிமுக எம்.பி., வைகோ பாஜகவை விமர்சனம் செய்யமால், காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்து

    READ MORE
  • மாதந்தோறும் மாவட்ட களஆய்வு; முதல்வர் உத்தரவு

    சென்னை: தமிழகத்தில் மாவட்டம் தோறும் ஒவ்வொரு மாதமு களஆய்வு செய்ய வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். மாவட்ட கலெக்டர்கள் மாநாடு இன்று சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர், தமிழக அரசின் திட்டங்கள் செயல்படும் விதம் குறித்து ஒவ்வொரு மாதமும் களஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், ஆய்வு நடத்திய ஆய்வறிக்கையை மாதந்தோறும் என்னுடைய அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட கலெக்டர்கள் கூட்டத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு