கலைஞர் காத்திருந்தாரு, ஸ்டாலின் வீட்டுக்கே வந்தாரு. இவங்கள நம்பி போனோம் இப்போ என்ன ஆச்சு? அக்காவிடம் புலம்பிய சுதீஷ்..

கலைஞர் காத்திருந்தாரு, ஸ்டாலின் வீட்டுக்கே வந்தாரு. இவங்கள நம்பி போனோம் இப்போ என்ன ஆச்சு? அக்காவிடம் புலம்பிய சுதீஷ்..

இந்தவாட்டி எப்படியாவது டெல்லிக்கு போயிடலாம் என சுதீஷ் கண்டா கனவில், நேற்று மண்ணை வாரி போட்டது அதிமுக. இதனால் நொந்து போன தம்பியை ஆறுதல்படுத்தியுள்ளார் தனது அக்கா.

பாமகவுக்கு மாட்டு ராஜ்யசபா சீட் கொடுத்தீங்க எங்களுக்கும் ஒன்னு குடுங்க என ஓபிஎஸ்,இபிஎஸ்ஸை இரண்டுவாட்டி சந்தித்தார் சுதீஷ். நேரடியாக சென்று கேட்டதால் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் இருப்பதாலும், அடுத்த வருஷ சட்டசபை தேர்தல் இருப்பதாலும் எப்படியும் நமக்கு சீட் கெடைச்சிடும் என கனவு கண்டு கொண்டுருந்தார் சுதீஷ்.

நேற்றைய அதிமுக வேட்பாளர்கள் வெளியான சில நிமிடங்களில் கோபமான சுதீஷ், தனது மொபைல் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு கோபத்தில் தனது வீட்டுக்குள் முடங்கிவிட்டார்.

இந்த ராஜ்யசபா எம்பியை வைத்து அரசியலில் தனக்கான சாம்ராஜ்யத்தை உருவாக்கிக்கலாம் என பிளான் போட்டு வைத்திருந்த கனவில் இடியை இறக்கியது அதிமுக.

கலங்கி இருந்த தனது தம்பி சுதீஷ்ஷை அவரது அக்காவுமான பிரேமலதா சுதீஷை தொடர்புகொள்ள முயன்றார். ஆனால் அவர் தொடர்பில் கிடைக்கவில்லை என்றதும் வீட்டுக்கே சென்று தம்பியை சமாதானப்படுத்தியிருக்கிறார் பிரேமலதா.

சமாதானப்படுத்திய அக்காவிடம் கடந்த காலங்களில் தேமுதிக செய்த தவறை சுட்டிக்காட்டி பேசினாராம் அதில், கடந்த சட்டசபை தேர்தலப்போ கூட்டணிக்கு வருவோம்ன்னு கலைஞர் பழம் கணிக்கிறது பாலில் விழும் என நம்பி இருந்தார், ஆனா நாம வைகோ, திருமாவளவனை நம்பி மக்கள் நல கூட்டணியில் சேர்ந்தோம் என்ன ஆச்சு? அடுத்ததா ஸ்டாலின் வீடு தேடி வந்து மாமாவை ( விஜயகாந்த்) சந்திச்சாரு நாம அப்போவாச்சும் திமுக கூட கூட்டணிக்கு போயிருக்கலாம், ஆனால் பாருங்க அவங்க கூட்டணியில் வைகோ, திருமா, கம்யூனிஸ்ட்கள் ஆளுக்கு 2 சீட் வாங்கி ஜெயிச்சி எம்பி ஆயிட்டாங்க, ஆனா நாம இவங்கள நம்பி போனோம் ஒரு சீட் கூட ஜெயிக்கலை, திமுக கூட போயிருந்தா இப்போ நமக்கு நாலு எம்.பி இருந்திருக்கும்.

கூட்டணியில் இருந்த பாமக கூட தோத்துடுச்சி ஆனா அவங்களுக்கு மட்டும் எம்பி கொடுத்தாங்க. இப்ப நாம எந்த வகையில குறைஞ்சிட்டோம்? அதுகூட விடுங்க தமாகாவுக்குக் கொடுத்திருக்காங்க? தேமுதிகவை விட தமாகா பெரிய கட்சியா? நம்மளவிடவா வாக்குவங்கி அவங்களுக்கு இருக்கா? என்று சுதீஷ் கேட்க கேட்க பிரேமலதா அவரது கோபத்தைத் தணித்திருக்கிறார்.

இதற்குப் பிறகுதான் நேற்று இரவு 10.53 மணிக்கு சுதீஷ் தனது ஃபேஸ்புக்கில், ‘நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம், நமது சின்னம் முரசு’ என்று தேமுதிகவின் முரசு சின்னம் போட்டு பதிவேற்றியிருக்கிறார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்