முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • என்எல்சி குழுவினர் புது முயற்சி

    மணப்பாறை: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க, என்எல்சி மீட்புக்குழுவினர் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் சிறுவன் சுர்ஜித் என்ற குழந்தை நேற்று மாலை 5 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்தானர். குழந்தையை மீட்க தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் மீட்புப்பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், இடிக்கி மூலம் குழந்தையை மீட்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. பின்னர் முதல்வரிடம்

    READ MORE
  • குழந்தையை மீட்க போராட்டம்

    மணப்பாறை: மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை இடுக்கி போன்ற கருவி மூலம் மீட்கும் முயற்சியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மணப்பாளை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் நேற்று ஆழ்துளை கிணறு ஒன்றில் குழந்தை சுர்ஜித் விழுந்தான். அந்த சிறுவனை மீட்க கடந்த 21 மணி நேரமாக மீட்புக்குழுவினர் போராடி வருகின்றனர். இந்நிலையில், பேரிடர் மீட்புக்குழு அதிகாரி கூறுகையில், இடுக்கி போன்ற கருவியால் மீட்க முடியாவிடில் பக்கவாட்டில் துளையிட்டு குழந்தையை மீட்க முடிவு செய்துள்ளோம். ஆழ்துளை கிணற்றில்

    READ MORE
  • புதிய எம்எல்ஏக்கள் 29ல் பதவியேற்பு

    சென்னை: நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றிபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் அக்டோபர் 29ம் தேதி பதிவியேற்கவுள்ளனர். விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழச்செல்வன் 44,924 வாக்குகள் வித்தியாசத்திலும், நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 33,445 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றிபெற்றனர். இந்நிலையில், புதிய தேர்வாகியுள்ள எம்எல்ஏக்கள் இருவரும் வரும் 29ம் தேதி பதவியேற்கின்றனர். இவர்களுக்கு சபாநாயகர் தனபால் பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.

    READ MORE
  • வாக்கு எண்ணிக்கை குறித்து இன்று மாலை ஆலோசனை!

    சென்னை: நாடுமுழுவதும் 7 கட்டமாக மக்களவைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் 23ம் தேதி நடக்கயிருக்கிறது. இதில் தமிழகத்தில் மொத்தம் மக்களவை தேர்தலுக்கான 39 தொகுதிகளிலும், சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற்ற 22 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்நிலையில், தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ காணொலி காட்சி மூலம் ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார். இந்த ஆலோசனையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல்

    READ MORE
  • முதல்வர் நாளை டெல்லி பயணம்?

    சென்னை: பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில், தேசிய ஜனநாயக கட்சியின் டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கூட்டத்தில் விருந்து உபசரிப்பும் நடைபெறவுள்ளது. அதே நாளிலேயே அமைச்சரவை கூட்டத்தையும் கூட்டியுள்ளது. இந்நிலையில், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித்ஷா நாளை விருந்து அளிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    READ MORE
  • பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடை..!

    சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இந்த கல்வியாண்டில் புதிய சீருடை வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, கரும்பச்சை நிறத்தில் கால் சட்டையும், இளம் பச்சை நிறத்தில் கட்டமிட்ட மேல் சட்டையும், மாணவிகளுக்கு இதே நிறத்தில் புதிய சீருடை வழங்கப்படும். மேலும் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு