என்எல்சி குழுவினர் புது முயற்சி

என்எல்சி குழுவினர் புது முயற்சி

மணப்பாறை:

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க, என்எல்சி மீட்புக்குழுவினர் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் சிறுவன் சுர்ஜித் என்ற குழந்தை நேற்று மாலை 5 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்தானர். குழந்தையை மீட்க தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மீட்புப்பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், இடிக்கி மூலம் குழந்தையை மீட்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. பின்னர் முதல்வரிடம் பேசி, என்எல்சி மீட்புக்குழுவினர் வரழைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அந்த ஆழ்துறை கிணற்றுக்கு அருகில் மற்றொரு ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டு, இரு ஆழ்துறை கிணறுகளை இணைப்பை உருவாக்கி, அதன் வழியாக என்எல்சி மீட்புக்குழுவினரில் ஒருவரை உள்ளே அனுப்பி குழந்தையை வெளியே மீட்கும் பணியை மேற்கொள்ள இருக்கிறோம்.

குழந்தை விழுந்து 23 மணி நேரம் ஆகிவிட்டதால், என்எல்சி மீட்புக்குழுவினர் இந்தப்பணி 2 அல்லது 3 மணி நேரத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்