முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • ஒசூரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

    ஒசூர்: ஒசூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது, முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ஒன்றியத்தில் உள்ள 26 சிற்றூராட்சிகளில் முதல் கட்டமாக டிசம்பர் 27 அன்று ஊராக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. திமுக கூட்டணியில் இடம் கிடைக்காத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிமுகவை எதிர்த்தே சில இடங்களில் களம் கண்டுள்ளனர். அதிமுக கூட்டணியிலும், பாமக சில இடங்களிலும் பாஜக அனைத்து இடங்களிலுமே தனியாக போட்டியிட்டுள்ளன, இவர்களுக்கு இனையாக

    READ MORE
  • செங்கத்தில் வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைப்பு

    செங்கம்: செங்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 26வது வார்டு வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. செங்கம் ஒன்றியத்தில் 26வது வார்டில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் சர்ச்சைக்குரிய வகையில் வாக்களித்தாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தேர்தல் அதிகாரியை முற்றுகையிட்டு திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், 26வது வார்டு வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    READ MORE
  • கடலைக்காய் திருவிழா; நூதன வழிபாடு

    ஒசூர்: ஒசூரில் புத்தாண்டில் நாடு நலம்பெற விவசாயம் செழிக்க வேண்டி கடலைக்காய் திருவிழா நடைபெற்றது. இதில் ஆஞ்சநேயர் மீது கடலை எரிந்து பக்தர்கள் நூதன வழிபாடு செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் புத்தாண்டையொட்டி நாடு நலம்பெற வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டியும் பாரம்பரிய முறைப்படி கடலைக்காய் திருவிழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஆஞ்சநயேர் சுவாமி மீது கடலைக்காயை எரிந்து நூதன வழிபாட்டை மேற்கொண்டனர். ஒசூர் ராஜகணபதி நகரிலுள்ள ஸ்ரீராஜகணபதி வரசித்தி ஆஞ்சநேயர் கோயிலில் 62 ஆம் ஆண்டு

    READ MORE
  • குடிநீர் திட்டப்பணிக்கு கூடுதலாக ரூ.200 கோடி ஒதுக்கீடு!

    சென்னை: தமிழகம் முழுவதும் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து இன்று முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்துக்குபின் முதல்வர் கூறுகையில், தமிழகம் முழுவதும குடிநீர் திட்டப்பணிகளுக்காக ஏற்கனவே ரூ.710 கோடி ஒதுக்கபட்டிருந்து. தற்போது கூடுதலாக ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜோலார்பேட்டையிலிருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டுவர திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்காக ரூ.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். சென்னை குடிநீர் பிரச்சினையை தீர்க்க 2 மில்லியன் லிட்டர் தண்ணீர்

    READ MORE
  • விஜயகாந்தின் வீடு, கல்லூரி ஏலம்..!

    சென்னை: கடன் பாக்கி மற்றும் வட்டி வசூல் நடவடிக்கையால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு மற்றும் கல்லூரியை ஏலத்தில் விட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது. ரூ.5.52 கோடி கடன் பாக்கியை விஜயகாந்த் திருப்பி செலுத்தவில்லை. இதனால், சாலிகிராமத்தில் உள்ள அவரது வீடு, மற்றும் மதுராந்தகம் மாமண்டூரில் உள்ள ஆன்டாள் அழகர் கல்லூரியை ஏலம் விடப்போவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது. ஜூலை 26ம் தேதி இந்த ஏலம் நடைபெறும் என இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது.

    READ MORE
  • கடந்த 2 நாளில் தங்கம் விலை ரூ.1000 உயர்வு!

    சென்னை: சென்னையில் தங்கம் விலை கடந்த 2 நாட்களில் சவரனுக்கு ரூ.1000 உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.464 உயர்ந்து ரூ.26,168க்கு இன்று விற்பனையானது. கடந்த 2 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1000 வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு