முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • வேட்பாளர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி

    அரியலூர்: அரியலூர் அருகே ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட்டவர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் அடுத்த அல்லிநகரம் ஊராட்சி மன்ற தலைவருக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவராக மருதமுத்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மருதமுத்துவை எதிர்த்து போட்டியிட்ட பழனிவேல் என்பவர், வாக்கு எண்ணிக்கையில் பல குளறுபடிகள் நடந்துள்ளளதாகக் கூறி மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என அவருடடைய ஆதரவாளர்கள் பெரம்பலூர் அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல்

    READ MORE
  • கல்லூரி மாணவிக்கு உற்சாக வரவேற்பு

    ஒசூர்: ஒசூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரான கல்லூரி மனைவிக்கு கிராமத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது காட்டிநாயக்கதொட்டி ஊராட்சி. இதே கிராமத்தை சேர்ந்த இறுதி ஆண்டு பட்டபடிப்பு மாணவி சந்தியா ராணி(21) ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வெற்றி பெற்றார். மாணவி, ஊராட்சி மன்ற தலைவரானதையடுத்து அவரது கிராமத்தில் உறவினர்கள்,நண்பர்கள் சார்பில் மேளதாளத்துடன் பட்டாசு வெடித்து இனிப்புக்கள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    READ MORE
  • இளம் வயது ஊராட்சிமன்ற தலைவர்

    கிருஷ்ணகிரி: உள்ளாட்சி தேர்தலில் இளம் வயது ஊராட்சி மன்ற தலைவராக சந்தியா ராணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், காட்டிநாயக்கன்தொட்டி கிராம ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 21 வயதான சந்தியா ராணி வெற்றிபெற்றுள்ளார். இவர், பி.பி.ஏ., 2ம் ஆண்டு படித்து வருகிறார். இளம் வயது ஊராட்சி மன்ற தலைவர் என்ற பெருமை சந்தியா ராணி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  

    READ MORE
  • நடிகர் சங்க தேர்தல் நடத்த அனுமதி!

    சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை வரும் 23ம் தேதியே நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடிகர்சங்க தேர்தலை நிறுத்த சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து விஷால் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், நடிகர் சங்க தேர்தலை ஏற்கனவே அறிவித்தபடி வரும் 23ம் தேதியே நடத்தலாம் எனவும், ஆனால், வாக்குகள் மட்டும் எண்ணக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. மேலும்,

    READ MORE
  • தமிழகத்தில் 62 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

    சென்னை: தமிழகம் முழுவதும் 63 இன்ஸ்பெக்டர்கள், ஆயுதப்படையை சேர்ந்த 20 போலீசாரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் முடிவுக்குபின், முதன் முறையாக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்படுள்ளனர்.

    READ MORE
  • பள்ளிகளில் தூய்மை வாசகங்கள் எழுத உத்தரவு!

    சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தூகெசை சார்ந்த விழிப்புணர்வு வாசகங்களை எழுத உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில திட்ட இயக்குனரகம், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் சுவர்களில் தூய்மை சார்ந்த விழிப்புணர்வு வாசகங்களை எழுத வேண்டும் எனவும், சுவர், கழிப்பறைகளில், அசுத்தத்தை அகற்றி நோயை ஒழியுங்கள், சாப்பிடும் முன், கழிவறையை பயன்படுத்திய பின் கைகளை சோப்பால் கழுவவும் போன்ற தூய்மை சார்ந்த விழிப்புணர்வு வாசகங்களை எழுத

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு