முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • வெற்றிகண்ட 2 மனைவிகள்; கணவருக்கு ‘ஜாக்பாட்’

    திருவண்ணாமலை: வந்தவாசி அருகே முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரரின் 2 மனைவிகளும் பஞ்., தலைவராக வெற்றிவாகை சூடியுள்னர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஒன்றியதிற்கு உட்பட்ட கோவில் குப்பம் மற்றும் வழூர் அகரம் ஆகிய ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு காஞ்சனாவும், செல்வியும் போட்டியிட்டனர். இவர்கள் இருவருமே முன்னாள் பஞ்., தலைவர் தனசேகர் என்பவரின் மனைவிகள். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வெவ்வேறு ஊராட்சிகளில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு,, வெற்றியும் பெற்றுள்ளனர். இதனால் பூரிப்புடன் இரண்டு மனைவிகளையும் அழைத்து மாலை சூடி

    READ MORE
  • பொங்கல் பரிசுக்கு ரூ.1,677 கோடி

    சென்னை: தமிழகத்திலுள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க ரூ.1,677 கோடியை கூட்டுறவு வங்கிகளுக்குதமிழக அரசு அளித்துள்ளது. ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வந்தது. இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்காக ரூ.1000 உள்ளிட்ட பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். உள்ளாட்சி தேர்தலையொட்டி, 27 மாவட்டங்களில் ரூ.1000 உள்ளிட்ட பொங்கல் பரிசு வழங்க அரசுக்கு தடை விதித்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையயம் தெரிவித்திருந்தது.

    READ MORE
  • அரை நிர்வாணத்தில் இளம்பெண் உடல்

    வேலூர்: வேலூர் கழிவுநீர் கால்வாய் ஒன்றில் அரை நிர்வாணத்துடன் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாநகர் கிரீன் சர்க்கிள் அருகே உள்ள கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்த வழியாக பொதுமக்கள் நேற்று நடந்து சென்றபோது, கவிழ்ந்த நிலையில் இளம்பெண் சடலம் கிடந்தது. அதிர்ச்சியடைந்த மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அந்த உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பெண் வடமாநிலத்தை சேர்ந்தவராக

    READ MORE
  • தமிழகத்தில் 2 நாட்களுக்கு கன மழை!

    சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை,  மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெப்பசலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசனது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    READ MORE
  • துணை முதல்வருடன் பாண்டவர் அணி சந்திப்பு!

    சென்னை: தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் பாண்டவர் அணி இன்று சந்தித்து பேசினர். சென்னை தலைமை செயலகத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துடன், பாண்டவர் அணியை சேர்ந்த நாசர், ராஜேஷ், லதா, சச்சு உள்ளிட்டோர் சந்தித்து பேசினார். நாளை நடக்கும் நடிகர் சங்க தேர்தல் நியாயமாக நடைபெறவும், உரிய பாதுகாப்பு அளிக்கவும் துணை முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளனர். நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க கோரி விஷால் தாக்கல் செய்த மனுவை ஏற்று அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம்

    READ MORE
  • ‘‘குடிநீர் இல்லையென்றால்… அங்கீகாரம் ரத்து’’ – செங்கோட்டையன்

    சென்னை: தனியார் பள்ளிகளில் குடிநீர் இல்லை என கூறினால் அந்தப்பள்ளியின் அங்கீகாரம் ரத்துசெய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் தண்ணீர் பிரச்சனை நிலவிவருகிறது. சென்னையில் பள்ளிகள் விடுமுறை முடிந்து திறக்கப்பட்ட நிலையில் குடிநீர் பிரச்சனையால் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சில பள்ளிகள் அரை நாள் விடுமுறைகளையும் அளித்து வருகிறது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், தனியார் பள்ளிகளில் குடிநீர் தட்டுபாடு உள்ளது என கூறினால் அந்த

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு