ஒசூரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

ஒசூரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

ஒசூர்:

ஒசூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது, முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ஒன்றியத்தில் உள்ள 26 சிற்றூராட்சிகளில் முதல் கட்டமாக டிசம்பர் 27 அன்று ஊராக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.

திமுக கூட்டணியில் இடம் கிடைக்காத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிமுகவை எதிர்த்தே சில இடங்களில் களம் கண்டுள்ளனர்.

அதிமுக கூட்டணியிலும், பாமக சில இடங்களிலும் பாஜக அனைத்து இடங்களிலுமே தனியாக போட்டியிட்டுள்ளன, இவர்களுக்கு இனையாக சுயேச்சைகளும் போட்டி நெருக்கடியை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்.

விறுவிறுப்பாக நடைப்பெற்ற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் டிசம்பர் 25 அன்று மாலை ஓய்ந்த பின்பாக டிசம்பர் 27 ல் நடந்த தேர்தலில் ஒசூர் ஒன்றியத்தில் 79.81% வாக்குகள் பதிவாகின.

ஒசூர் ஒன்றியத்தில் உள்ள 16 ஒன்றிய கவுன்சிலர், 2 மாவட்ட கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு திமுக – அதிமுக கட்சிகளுக்கு நேரடியாகவே போட்டி நிலவி வருகிறது.

அனைவரின் கவனத்தை பெற்றுள்ள ஒசூர் ஒன்றியத்தின் தேர்தல் முடிவுகள், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வெளியிடப்பட உள்ளது.

முதற்கட்டமாக தபால் வாக்குகள் அடங்கிய பெட்டியினை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்பாளர்கள்,முகவர்கள் முன்னிலையில் சீல் பிரிக்கப்பட்டு தேர்தல் பணியாளர்கள் மூலம் மேஜைகளில் வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் கூடைகளில் கொட்டப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

ஒசூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் ஒசூர் அரசு கலைக்கல்லூரியில் எண்ணப்படுவதால் கல்லூரி முன்பாக அரசியல் கட்சிகள்,சுயேச்சைகளின் ஆதரவாளர்கள் திரண்டிருப்பதால் அரசியல் திருவிழா கோலம் பூண்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்