முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • கெலவரப்பள்ளி அணையிலிருந்து நீர் வெளியேற்றம்

    ஒசூர்: ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக 4 மதகுகள் வழியாக 728 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த சில தினங்களாக நீரின் வரத்து குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தென்பெண்ணை அறு நீர் பிடிப்பு பகுத்கிகளில் மழை விட்டுவிட்டு பெய்து வருவதால். இதன் காரணமாக ஓசூரில் உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் மொத்த

    READ MORE
  • எம்.பி.,யை மடக்கி பிடித்த போலீசார்

    நாங்குநேரி: தேர்தல் விதிமுறைகளை மீறி நாங்குநேரி தொகுதிக்குள் நுழைய முயன்றதாக கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமாரை மடக்கி பிடித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கலுங்கடி பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் வசந்தகுமார் சென்றுகொண்டிருந்த போது நாங்குநேரி போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

    READ MORE
  • ஆட்சியர்களுக்கு  முதல்வர் உத்தரவு

    சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மழை மற்றும் அணைகளின் நிலவரங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு நிவாரண

    READ MORE
  • தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

    சென்னை: தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இகுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், நெல்லை, மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் 6 செ.மீ.

    READ MORE
  • கமலின் வீடு, அலுவலத்துக்கு பாதுகாப்பு..!

    சென்னை: அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும், மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமலின் வீடு மற்றும் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி தொகுதியில் பள்ளப்பட்டி பிரச்சார கூட்டத்தில் பேசிய கமல், இஸ்லாமியர்கள் அதிகம் பேர் இருக்கும் இடம் என்பதால் சொல்லவில்லை; காந்தி சிலைக்கு முன் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து அவர் பெயர் கோட்சே என்றார். மேலும் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரனாக, அந்த கொலைக்கு கேள்வி கேட்க

    READ MORE
  • புதிய பாடப்புத்தகங்கள் விற்பனை துவங்கியது!

    சென்னை: தமிழகத்தில் அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், தற்போது புதிய பாடப்புத்தகங்கள் விற்பனை சென்னை பள்ளிக்கல்வி அலுவலகத்தில் தொடங்கியுள்ளது. 6,7,8,10 மற்றும் 12ம் வகுப்புக்களுக்கான புதிய பாடப்புத்தகங்களின் விற்பனை இன்று சென்னையில் உள்ள பள்ளிக்கல்வி அலுவலகத்தில் தொடங்கியது. மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர். 12ம் வகுப்பில், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட சில முக்கிய பாடங்களுக்கு 2 தொகுதிகளுக்கு பதிலாக ஒரே பாட புத்தகம் தயார் செய்யப்பட்டுள்ளது. அரசு

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு