முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • 100க்கு 25 கட்டாயம்

    சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு 25 மதிப்பெண்கள் கட்டாயம் பெறவேண்டும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்நிலை தேர்வு திட்டத்தில், தமிழர் வரலாறு, பண்பாடு உள்ளிட்டவை குறித்து அதிகமான கேள்விகள் கேட்கப்படும். முதன்மைத் தேர்வு இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன, முதல் தாள் தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. மேலும், 100 மதிப்பெண்களுக்கு, 25 மதிப்பெண்கள் கட்டாயம் பெறவேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 25 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே

    READ MORE
  • தமிழகத்தில் ‘ரெட் அலர்ட்’ இல்லை

    சென்னை: தமிழகத்தின் இன்று 4 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை கிடையாது என சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழை பெய்யும் என ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்து. இந்நிலையில், வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, தமிழகத்தில் மழை நீடிக்கும். கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ‘ரெட்

    READ MORE
  • முதியவரை மர்மநபர்கள் வெட்டிக்கொலை

    ஒசூர்: ஓசூர் அருகே மர்ம நபர்கள் முதியவர் ஒருவரை கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த இராயக்கோட்டை அருகே உள்ளது எடவனஹள்ளி கிராமம், இந்த கிராமத்தை சேர்ந்த சாக்கப்பன் (65) என்பவர் கிராமத்தின் அருகில் தோட்ட வீட்டில் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளார். தேங்காய் வியாபாரியான இவர், லட்சக்கணக்கில் ஏலச்சீட்டு நடத்தி, பலருக்கும் இன்றுவரை பணம் வழங்காமல் வெளியில் செல்வதை தவிர்த்து 6 மாதகாலமாக வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சாக்கப்பாவின்

    READ MORE
  • பி.இ., பி.டெக்., செமஸ்டர் தேர்வு முடிவு வெளியீடு..!

    சென்னை: பி.இ., பி.டெக்., பொறியியல் படிப்புகளின் டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 481 பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகளை எழுதியிருந்தனர். இதற்கான தேர்வு முடிவுகளை தற்போது அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வில் 6 பொறியியல் கல்லூரிகளில் தேர்வு எழுதிய மாணவர்களில் ஒருவர்கூட தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.

    READ MORE
  • அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது போலீசில் புகார்..!

    சென்னை: அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கமல் பேசும்போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெய்ர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுப்பேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்துள்ளேன் என தெரிவித்திருந்தார். இந்த சர்ச்சை பேச்சு தொடர்பாக, பா.ஜ., அதிமுக உள்ளிட்ட தலைவர்கள் கடும கண்டனத்தை தெரிவித்திருந்தனர். மேலும், கமலின் இந்த சர்ச்சை பேச்சுக்கு அவரின் நாக்கை அறுக்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருந்தார். மேலும், அரவக்குறிச்சி உள்ளிட்ட

    READ MORE
  • காலாவதியான தண்ணீர் கேன்கள்..! சென்னை வாசிகளே உஷார்..!!

    சென்னை: சென்னையில் காலாவதியான 8 மினி வேன்களில் கொண்டுவரப்பட்ட தண்ணீர் கேன்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை கோயம்பேடு, ரோகிணி தியேட்டர் அருகே இன்று அதிகாலையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அந்த வழியாக 8 மினி வேன்களில் வந்த தண்ணீர் கேன்களை சோதனை செய்ததில், காலாவதியான 580 கேன்களை கைப்பற்றினர். அந்த கேன்களில் லேபிள்கள் மாற்றி ஒட்டப்பட்டிருந்தது. மேலும், கோயம்பேடு, கொளத்தூர், வேளச்சேரி ஆகிய 3 இடங்களில் இந்த சோதனை

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு