முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • யானைகள் கூட்டம்; வனத்துறை எச்சரிக்கை

    ஒசூர்: ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதிக்குள் நுழைந்த 12 காட்டுயானைகளால் சுற்றுப்பகுதி மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியினுள் 12 காட்டுயானைகள் தஞ்சமடைந்திருப்பதால் சுற்றுபகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனக்காப்புக்காட்டிலிருந்து 50 காட்டுயானைகள் ஜவளகிரி வழியாக தமிழகத்திற்குள் நுழைந்தது ஜவளகிரி, அஞ்செட்டி,தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிகஅளவில் கேழ்வரகு பயிரிடப்பட்டிருப்பதால் தற்போது கதிர்வளர்ந்து வருவதை யானைகள் விரும்பி சாப்பிடக்கூடியவை. அவ்வாறு 50 காட்டு

    READ MORE
  • பாமக -தேமுதிக மோதல்

    விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் பூத் பணம் பங்கிடுவதில் பாமக கட்சியினருக்கும் தேமுகதிக கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. தமிழகத்தின் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடந்து வருகிறது. காலை 8 மணிக்க வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், ஒருசில பகுதிகளில் வாக்கு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதியின் கல்யாணம்பூண்டியில் அமைந்துள்ள 96வது பூத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றுவந்த நிலையில், பாமக நிர்வாகி மணிகண்டனுக்கும், தேமுதிக நிர்வாகி சேகர் என்பவருக்கும் பூத் பணத்தை பங்கிடுவதில்

    READ MORE
  • தமிழகத்துக்கு நாளை ‘ரெட் அலர்ட்’

    சென்னை: தமிழகத்தில் நாளை அதி  கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிளில் வளி மண்டல சுழற்சியும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஒரு வளிமண்டல சுழற்சியினாலும் அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினர், காரைக்கால், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், மதுரை, சேலம், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், ஈரோடு, திருப்பூர்

    READ MORE
  • ஆயுள் தண்டனை கைதியின் யோகா பயிற்சிக்கு அனுமதி..!

    சென்னை: ஆயுள் தண்டனைக் கைதி சிறையில் அளித்து வரும் யோகா பயிற்சிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் இரணியன்ஹள்ளி கிராமத்தை சேர்ந்த செந்தில், கடந்த 1998ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சேலம் மத்திய சிறையில் இருந்து வருகிறார். சக கைதிகளுக்கு யோகா பயிற்சி அளித்துவரும் செந்திலை, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரை விடுவிக்க அவரது தாயார் அமுதா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை

    READ MORE
  • ‘டிசி’யில் ஜாதி இனி இல்லை..! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!!

    சென்னை: மாணவர்களின் பள்ளி மாற்றுச்சான்றிதழில் ஜாதியை குறிப்பிடக்கூடாது என தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், வருவாய்த்துறையினர் அளிக்கும் ஜாதி சான்றிதழ்தான் இறுதியானது. ஆகையால், இனி பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழில் ஜாதியை குறிப்பிடக்கூடாது. ஜாதிப்பிரிவு என்ற பிரிவு இடத்தில் வருவாய்த்துறை ஆவணத்தில் பார்க்கவும் என குறிப்பிடவேண்டும் என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

    READ MORE
  • தாம்பரத்திலிருந்து மினி விமான சேவை..!

    சென்னை: சென்னை மீனம்பாக்க விமான நிலையத்தின் நெருக்கடியை சமாளிக்கும் வகையில், தாம்பரம் விமானப்படை தளத்திலிருந்து சிறிய ரக விமானங்களை இயக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம் மற்றும் வெளிநாட்டு முனையத்திலிருந்து தினந்தோறும் 470 விமான சேவை இயக்கப்படுகின்றன. இங்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், தற்போது உள்நாட்டு விமான சேவையை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், விமான நிலையத்தை

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு