தாம்பரத்திலிருந்து மினி விமான சேவை..!

தாம்பரத்திலிருந்து மினி விமான சேவை..!

சென்னை:

சென்னை மீனம்பாக்க விமான நிலையத்தின் நெருக்கடியை சமாளிக்கும் வகையில், தாம்பரம் விமானப்படை தளத்திலிருந்து சிறிய ரக விமானங்களை இயக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம் மற்றும் வெளிநாட்டு முனையத்திலிருந்து தினந்தோறும் 470 விமான சேவை இயக்கப்படுகின்றன. இங்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், தற்போது உள்நாட்டு விமான சேவையை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து விமானநிலைய அதிகாரிகள் கூறுகையில், தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைக்காக சிறிய பயணிகள் விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பாக முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்துள்ளது. இதுபற்றிய தகவல் இந்திய விமானப்படைக்கு தெரிவித்துள்ளோம். அவர்கள் இது தொடர்பான திட்டத்துக்கு அனுமதி அளித்ததும் உடனடியாக பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்