ஆயுள் தண்டனை கைதியின் யோகா பயிற்சிக்கு அனுமதி..!

ஆயுள் தண்டனை கைதியின் யோகா பயிற்சிக்கு அனுமதி..!

சென்னை:

ஆயுள் தண்டனைக் கைதி சிறையில் அளித்து வரும் யோகா பயிற்சிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் இரணியன்ஹள்ளி கிராமத்தை சேர்ந்த செந்தில், கடந்த 1998ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சேலம் மத்திய சிறையில் இருந்து வருகிறார்.

சக கைதிகளுக்கு யோகா பயிற்சி அளித்துவரும் செந்திலை, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரை விடுவிக்க அவரது தாயார் அமுதா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அமுதாவின் கோரிக்கையை 6 வாரத்திற்குள் பரிசீலனை குழுவுக்கு அனுப்பவேண்டும் என்று சேலம் சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த உத்தரவை அமல்படுத்தாத சிறை கண்காணிப்பாளருக்கு எதிராக அமுதா நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அவமதிப்பு வழக்கு தொடர்ந்தவுடன் செந்தில் அளித்துவந்த யோகா பயிற்சி மறுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இதனை கேட்ட நீதிபதிகள், மன அழுத்தத்திலிருந்த விடுவிக்கும் யோகா பயிற்சியை தடுத்தால், நஷ்டம் சிறை கைதிகளுக்கும், அதிகாரிகளுக்கும்தான் என கூறியதுடன், செந்தில் யோகா பயிற்சியை தொடரலாம் என அனுமதி அளித்தனர்.
மேலும் இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அடுத்த மாதம் ஒத்திவைத்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்