யானைகள் கூட்டம்; வனத்துறை எச்சரிக்கை

யானைகள் கூட்டம்; வனத்துறை எச்சரிக்கை

ஒசூர்:

ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதிக்குள் நுழைந்த 12 காட்டுயானைகளால் சுற்றுப்பகுதி மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியினுள் 12 காட்டுயானைகள் தஞ்சமடைந்திருப்பதால் சுற்றுபகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனக்காப்புக்காட்டிலிருந்து 50 காட்டுயானைகள் ஜவளகிரி வழியாக தமிழகத்திற்குள் நுழைந்தது ஜவளகிரி, அஞ்செட்டி,தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிகஅளவில் கேழ்வரகு பயிரிடப்பட்டிருப்பதால் தற்போது கதிர்வளர்ந்து வருவதை யானைகள் விரும்பி சாப்பிடக்கூடியவை.

அவ்வாறு 50 காட்டு யானைக்கூட்டத்திலிருந்து பிரிந்த 12 காட்டுயானைகள் ஜவளகிரி வனப்பகுதியில் இருந்து உணவு தேடி ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதியினுள் நுழைந்துள்ளது.

சானமாவு வனப்பகுதி சுற்றிலும் தென்பெண்ணை ஆற்றுநீர் பாசனத்தால் நெற்பயிர் உள்ளிட்டவை வளர்ந்து வரும் நிலையில் யானைகளின் வருகையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், யானைகளின் வருகையால் சானமாவு வனப்பகுதி ஒட்டிய போடூர், ஆழியாளம், சானமாவு, இராமாபுரம், பாத்தக்கோட்டா உள்ளிட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், ஆடு மாடு மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்குள் செல்வதையும் விளைநிலங்களுக்கு இரவு நேர காவலுக்கு செல்வதையும் தவிர்க்க வேண்டுமென வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்