தமிழகத்துக்கு நாளை ‘ரெட் அலர்ட்’

தமிழகத்துக்கு நாளை ‘ரெட் அலர்ட்’

சென்னை:

தமிழகத்தில் நாளை அதி  கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிளில் வளி மண்டல சுழற்சியும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஒரு வளிமண்டல சுழற்சியினாலும் அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினர், காரைக்கால், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், மதுரை, சேலம், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாக்குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நாளை நீலகிரி கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாக்குமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் தமிழகத்திற்கு நாளை ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்