100க்கு 25 கட்டாயம்

100க்கு 25 கட்டாயம்

சென்னை:

டிஎன்பிஎஸ்சி தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு 25 மதிப்பெண்கள் கட்டாயம் பெறவேண்டும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்நிலை தேர்வு திட்டத்தில், தமிழர் வரலாறு, பண்பாடு உள்ளிட்டவை குறித்து அதிகமான கேள்விகள் கேட்கப்படும். முதன்மைத் தேர்வு இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன, முதல் தாள் தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

மேலும், 100 மதிப்பெண்களுக்கு, 25 மதிப்பெண்கள் கட்டாயம் பெறவேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 25 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே இரண்டாம் தாள் தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்