முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • சிறுவன் சாவில் மர்மம்

    ஒசூர்: ஓசூரில், நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வெங்கடேஷ் நகர், வெங்கடரமணப்பா என்பவரின் மகன் சந்திரேஷ்(12), இவன் அரசுப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். நேற்று சனிக்கிழமை விடுமுறை என்பதால் கோவில் முன்பாக சிறுவன் துளசி விற்றுவந்ததாகவும் துளசி விற்ற 2 ஆயிரம் ரூபாயை வைத்திருந்த சந்திரேஷை அதே பகுதியை சேர்ந்த 3 பேர் அருகில் உள்ள குளத்தில் குளிக்க அழைத்து

    READ MORE
  • உதயநிதி பரிசு வழங்கி பாராட்டு

    ஒசூர்: ஒசூரில், திமுக இளைஞரணி சார்பில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். ஒசூரில் பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான பேச்சுப்போட்டிகள், கட்டுரைப்போட்டிகள், கவிதை ஒப்புவித்தல் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகள் மற்றும்

    READ MORE
  • உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு

    ஓசூர்: ஓசூரில் பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களின் போட்டிகளை நடத்தவந்த உதயநிதிக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆண்டுதோறும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு மாவட்டந்தோறும் இளைஞரணியினர் சார்பில் பேச்சுப் போட்டி, கட்டுரை ஒப்புவித்தல் போட்டி, ஓவிய போட்டிகள் உள்ளிட்டவை நடத்தி வெற்றி பெற்றோருக்கு மாநில அளவில் இறுதிப்போட்டிகளை மாநில இளைஞரணி செயலாளர், திமுக தலைவர் முன்னிலையில் நடத்துவது வழக்கம். திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டு நடத்தப்படும்

    READ MORE
  • 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும்: சென்னை வானிலை மையம்

    சென்னை: கடந்த சில தினங்களாக, தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்து வெயிலின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சில இடங்களில் இடி மின்னல் காற்றுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக

    READ MORE
  • அந்நிய செலாவணி வழக்கில் ஆஜராகாத சசிகலா!

    சென்னை: அந்நிய செலாவணி வழக்கில், இன்று காணொலி காட்சி மூலம் சசிகலா ஆஜராகவில்லை. ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், ஜே.ஜே., டிவிக்கு வெளிநாட்டிலிருந்து உபகரணங்கள் வாங்கியது தொடர்பான வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அந்த வழக்கில், இன்று காணொலி காட்சி மூலம் ஆஜராகுமாறு சசிகலாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து, அந்த உத்தரவின் நகல் கிடைக்க தாமதமானதால் காணொலி காட்சிக்க ஏற்பாடு செய்ய முடியவில்லை,

    READ MORE
  • இந்து தீவிரவாதம் என பேசிய கமலுக்கு தமிழிசை கண்டனம்..!

    சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல், தற்போது அரவக்குறிச்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரத்தில் பேசிய கமல், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவரது பெயர் நாதுராம் கோட்சே என தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக பாஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம், இந்து தீவிரவாதம் என பிரச்சாரத்தில் கமல் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய கமல் மீது

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு