முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பேரணி

    ஒசூர்: ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி பொதுக்கூட்டம், மற்றும் பேரணி நடைப்பெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில், அனைத்து ஜமாத் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெறக்கோரி நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் அதிமுக,பாமக கட்சிகளின் ஆதரவோடு நிறைவேறியது. இச்சட்டம் மதச்சார்பின்மையை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக இந்தியா முழுவதும் கலவரங்கள்,போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக ஓசூரை அடுத்த தேன்கனிக்கோட்டையில்

    READ MORE
  • ஒசூரில் எம்ஜிஆர் நினைவுதினம் அனுசரிப்பு

    ஒசூர்: தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 32 து நினைவு தினத்தையொட்டி ஒசூரில் அதிமுகவினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுகவின் நிறுவனரும் தமிழக முதல் முன்னாள் அமைச்சருமான எம்ஜிஆரின் நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல ஓசூரில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் அவர்களின் 32-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது ஓசூர் ராயக்கோட்டை சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு தமிழக முன்னாள் அமைச்சரும் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளருமான பாலகிருஷ்ண

    READ MORE
  • சொந்த ஊருருக்கு திரும்பிய தமிழக லாரிகள்

    லடாக்: கடும் பனிப்பொழிவு காரணமாக லடாக்கில் சிக்கிக்கொண்ட தமிழக லாரிகள் சொந்த ஊருக்கு திரும்ப அனுமதி அளித்துள்ளனர். கடந்த 30ம் தேதி சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களிலிருந்து ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே சோபியான் நகருக்கு சரக்கு லாரிகள் ஆப்பிள்களை ஏற்றிக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்தன. அப்போது, கடும் பனிப்பொழிவு காரணமாக லடாக் அருகே லோகமண்டா என்ற இடத்தில் ராணுவத்தினர் மற்றும் போலீசார் சுற்றுலா வாகனங்களை மட்டும் செல்ல அனுமதித்து, மற்ற கனரக வாகனங்களை நிறுத்தி வைக்கப்பட்டது. இதில்

    READ MORE
  • சென்னையில் ரவுடிகள் துப்பாக்கிச்சூடு!

    சென்னை: சென்னையில் ரவுடிகள் இடையே நடந்த மோதலில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. சென்னை எண்ணூரில் பிரபல ரவுடி அலெக்சாண்டருக்கும், செந்தில் குமார் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொண்டபோது துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இதில் செந்தில்குமார் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவத்தில் துப்பாகியால் சுட்ட ரவுடி அலெக்சாண்டர் தலைமறைவாகியுள்ளார். இந்த துப்பாக்கிச்சூடு எதற்காக நடைபெற்றது குறித்துபோலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

    READ MORE
  • விக்கிரவாண்டி காலியான தொகுதியாக அறிவிப்பு!

    சென்னை: விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி காலியானதாக தமிழக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார். விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியின் திமுக எம்எல்ஏவான கு.ராதாமணி கடந்த 15ம் தேதி காலமாகனார். இவரின் மறைவையடுத்து, தற்போது விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியான தொகுதியாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார்.

    READ MORE
  • 2 நாட்களுக்கு வெப்ப அலை..!

    சென்னை: தமிழகத்தின் திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், கடலூர் விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வெப்பசலனம் காரணமா தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு