சொந்த ஊருருக்கு திரும்பிய தமிழக லாரிகள்

சொந்த ஊருருக்கு திரும்பிய தமிழக லாரிகள்

லடாக்:

கடும் பனிப்பொழிவு காரணமாக லடாக்கில் சிக்கிக்கொண்ட தமிழக லாரிகள் சொந்த ஊருக்கு திரும்ப அனுமதி அளித்துள்ளனர்.

கடந்த 30ம் தேதி சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களிலிருந்து ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே சோபியான் நகருக்கு சரக்கு லாரிகள் ஆப்பிள்களை ஏற்றிக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்தன.

அப்போது, கடும் பனிப்பொழிவு காரணமாக லடாக் அருகே லோகமண்டா என்ற இடத்தில் ராணுவத்தினர் மற்றும் போலீசார் சுற்றுலா வாகனங்களை மட்டும் செல்ல அனுமதித்து, மற்ற கனரக வாகனங்களை நிறுத்தி வைக்கப்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த 450 லாரிகள் சிக்கி தவித்தன.

இதனைத்தொடர்ந்து, 18 நாட்களாக லடாக்கில் சிக்கியுள்ள லாரிகளை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு லாரி ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். தற்போது பனிப்பொழிவு குறைந்துள்ளதால் முதல் கட்டமாக 50 லாரிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்