முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • ஒரு வெங்காயம் ரூ.140; மக்கள் அதிர்ச்சி

    திருப்பத்தூர்: திருப்பத்தூர் மார்க்கெட்டில் ஒரு வெங்காயத்தின் விலை ரூ.140 விற்கப்படுவது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வட மாநிலங்களில் பெய்த கனமழையால் வெங்காயத்தின் விளைச்சல் கடும் சரிவை கண்டது. இதனையடுத்து நாடு முழுவதும் வெங்காயத்தின் தட்டுப்பாடு அதிகமானதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனையடுத்து, மத்திய அரசு துருக்கி, எகிப்து ஆகிய நாடுகளிலிருந்து 200 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்தது. மும்பையில் கப்பல் மூலம் வந்த வெங்காயத்தை நாடுமுழுவதும் அனுப்பப்பட்டது. இந்நிலையில் திருப்பத்தூர் வந்த எகிப்து வெங்காயம் ஒவ்வொன்றும் ஒரு

    READ MORE
  • ரஜினி பேச்சை நிறுத்திக்கொள்ளவேண்டும்

    ஒசூர்: வடமாநிலங்களில் பசுமாடுகளின் பேரில் நடந்த கொலைகளை பேசாத ரஜினி தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களை வன்முறை என பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஒசூரில் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். ஒசூரில், அனைத்து ஜமாத் இஸ்லாமிய அமைப்புக்கள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டமசோதாவை திரும்ப பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரிஇதில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சா கலந்துதகொண்டார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த

    READ MORE
  • பல்கலை., தேர்வுகள் ரத்து

    சிதம்பரம்: உள்ளாட்சி தேர்தலையொட்டி நடைபெற இருந்த அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. உள்ளாட்சி தேர்தலையொட்டி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஜனவரி 10 மற்றும் 11ம் தேதிக்கு மாற்றம் செய்து அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் நாளை முதல் ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    READ MORE
  • பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை..!

    சென்னை: சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வரும் ரவுடி வல்லரசு உள்ளிட்டோர் சென்னை வியாசர்பாடி எம்.என்.கார்டன் பகுதியில் நின்றிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் முதல்நிலை காவலர் பவுன்ராஜ் உள்ளிட்டோர் அங்கு விரைந்து ரவுடிகளை கைதுசெய்ய முயற்சித்தனர். அப்போது ரவுடி வல்லரசு தனது கூட்டாளிகளுடன் பயங்கர ஆயுதங்களை கொண்டு காவலர் பவுன்ராஜ் மீது சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் காவல் ஆய்வாளர் பவுன்ராஜ் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே சாய்ந்து

    READ MORE
  • ரயில்நிலையத்தில் அரிவாள் வெட்டு: ரயில்வே டிஜிபி ஆய்வு..!

    சென்னை: இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய சேத்துப்பட்டு ரயில்நிலையத்தில் ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு செய்தார். சேத்துப்பட்டு ரயில்நிலையத்தில் நேற்று ஈரோட்டை சேர்ந்த இளம்பெண்ணை அதே பகுதியை சேர்ந்த சுரேந்தர் அரிவாளால் வெட்டிவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தார். இருவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு இன்று சேத்துபட்டு ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தார்.

    READ MORE
  • நிதிஆயோக் கூட்டத்துக்குமுன் பிரதமருடன் முதல்வர் சந்திப்பு!

    புதுடெல்லி: நிதிஆயோக் கூட்டத்துக்கு முன்பாக பிரதமர் மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். இந்த சந்திப்பில்  தமிழகத்திற்கான வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிலுவையில் உள்ள தொகைகளை வழங்கக்கோரி அறிக்கையை பிரதமரிடம் முதல்வர்  பழனிசாமி சமர்ப்பித்தார். பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பின் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை முதல்வர் பழனிசாமி சந்தித்தார்.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு