ஒரு வெங்காயம் ரூ.140; மக்கள் அதிர்ச்சி

ஒரு வெங்காயம் ரூ.140; மக்கள் அதிர்ச்சி

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மார்க்கெட்டில் ஒரு வெங்காயத்தின் விலை ரூ.140 விற்கப்படுவது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வட மாநிலங்களில் பெய்த கனமழையால் வெங்காயத்தின் விளைச்சல் கடும் சரிவை கண்டது. இதனையடுத்து நாடு முழுவதும் வெங்காயத்தின் தட்டுப்பாடு அதிகமானதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதனையடுத்து, மத்திய அரசு துருக்கி, எகிப்து ஆகிய நாடுகளிலிருந்து 200 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்தது. மும்பையில் கப்பல் மூலம் வந்த வெங்காயத்தை நாடுமுழுவதும் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் திருப்பத்தூர் வந்த எகிப்து வெங்காயம் ஒவ்வொன்றும் ஒரு கிலோ அளவில் மிகப்பெரியதாக உள்ளது. இந்த வெங்காயம் கிலோ ரூ.140க்கு விற்கப்பட்டு வருகிறது. இதனால் ஒரு வெங்காயத்தை அதிக விலை கொடுத்து வாங்குவதா என பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்