முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • ஒசூரில் மனைவியை கொலை செய்து போலிசில் சரணடைந்த கணவர்

    ஒசூரில் குடும்பதகராறில் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன், போலிசில் சரணடைந்துள்ளார் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் லட்சுமிநாராயண நகரில் வசித்து வருபவர் மணிகண்டன்(30), சிந்துஜா(27) இவர்களுக்கு 3 வயதில் பெண்குழந்தை இருந்து வருகிறது. மணிகண்டன் மாமியார் வீட்டில் வசித்து வரும்நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பதகராறு இருந்து வந்துள்ளது. நேற்று கேஜிஎப் பகுதியில் உறவினரின் துக்க நிகழ்வில் பங்கேற்க காரில் மாமியர் குடும்பத்தினர் சென்றுவிட மனைவியை தீர்த்துக்கட்ட சரியான நேரத்தை எதிர்ப்பார்த்திருந்த மணிகண்டனுக்கு சாதகமாகி உள்ளது. நேற்றிரவே

    READ MORE
  • அமைச்சர் துரைக்கண்ணுக்கு திடீர் உடல்நலக்குறைவு… அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

    தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாயார் இறந்த தகவல் அறிந்து, நேரில் நலம் விசாரிக்க தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு காலை சென்னையிலிருந்து சேலத்திற்கு காரில் சென்றுக்கொண்டிருந்தார்.காலை 10 மணியளவில் திண்டிவனம் அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது அமைச்சர் துரைக்கண்ணுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, உடனே விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    READ MORE
  • பண்பாட்டை சீரழிக்கும் திரைப்படங்களுக்கு தடை: கடம்பூர் ராஜூ எச்சரிக்கை

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ அளித்த பேட்டி: ஆபாச படத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்சார் போர்டு மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ளதால் ஆபாச காட்சிகளை நீக்குமாறு தமிழக அரசு வலியுறுத்தும். பொதுவாக திரைப்படங்கள் மக்களுக்கு நல்ல கருத்துக்களை கூறும் சாதனங்களாக இருக்க வேண்டும். தமிழக அரசை பொறுத்தவரை தமிழர்களின் கலை, பண்பாட்டை சீரழிக்கும் வகையில் எந்தப் படம் வந்தாலும், அது யாருடைய படமாக இருந்தாலும் அதை சென்சார் போர்டு

    READ MORE
  • பள்ளிகள் எப்போது திறக்கப்படும்?

    நாமக்கல்: பள்ளிகள் தமிழகத்தில் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் தற்போதைய நிலையில் சூழலில் பள்ளிகள் திறப்பது என்பது சாத்தியமில்லை. பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். ஆன்லைன் வகுப்புகளை பொறுத்தவரை 2 நாட்களுக்குள் முதலமைச்சருடன் பேசி முடிவு செய்யப்படும் என அவர் கூறினார்.

    READ MORE
  • மத்திய ஆசிரியர் பணிக்கான தேர்வு ஒத்திவைப்பு

    மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஆசிரியர் பணிநியமனம் பெற மத்திய அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான தேர்வு மே மாதம் நடக்க இருந்த நிலையில் கொரோனா காரணமாக ஜூலை மாதம் 5ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்தநிலையில், கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த தகுதித் தேர்வு(சிடிஇடி) ஒத்தி வைக்கப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மேலும், இந்ததேர்வு நடத்துவது குறித்து

    READ MORE
  • சென்னையில் கமாண்டோ படை:புதிய வியூகம் என்ன?

    சென்னை மாநகராட்சியில் இந்த இரண்டு மண்டலங்களில் மட்டும் 12,000த்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உள்ளது கடந்த மூன்று மாதமாக இந்த இரண்டு பகுதிகளுக்கு மட்டும் ஆறுக்கும் மேற்பட்ட IAS, IPS அதிகாரிகள், 3000 திற்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள், மைக்ரோ நிலை திட்டங்கள் என கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல வியூகங்கள் வகுக்கப்பட்டன. அதனால் காக்கா தோப்பு உள்ளிட்ட சில பகுதிகளில் தொற்று குறைந்தாலும் மற்ற இடங்களில் பாதிக்கப்பட்டவர்களின் பரவலாக எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. அதற்கு மக்கள்

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு