முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • திமுக கூட்டணியில் கமலா?

    2021 இல் நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வேலைகளில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணி ஆகியன முதன்மையாக இருக்கின்றன. இவை தவிர நாம் தமிழர் கட்சி மற்றும் கமலின் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் களத்தில் இருக்கின்றன. இவற்றில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எந்தக் கூட்டணியிலும் இணையப்போவதில்லை என்றும் தனித்தே போட்டியிடப் போவதாகவும் சொல்லிவிட்டார். ஆனால் கமலோ வாய்ப்பிருந்தால் கூட்டணி அமைப்போம்

    READ MORE
  • கிசான் திட்ட முறைகேடு: நாளைக்குள் பணத்தை திரும்ப செலுத்தாவிட்டால் அரசு சலுகைகள் நிறுத்தம்

    கடலூா் மாவட்டத்தில் விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு தொடா்பாக மேலும் தற்போது வரை ரூ.11.40 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், முறைகேடாக பணம் பெற்றவர்கள் நாளைக்குள் திரும்ப செலுத்தாவிட்டால் அரசின் அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசால் பிரதமரின் ஊக்க நிதித் திட்டம் தொடங்கப்பட்டு, ஆண்டுக்கு 3 தவணைகளில் ரூ.6 ஆயிரம் வீதம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் சோவதற்கான விதிமுறைகளில் அளிக்கப்பட்ட சில

    READ MORE
  • தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி வரை கடைகள் திறக்கலாம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு !

    தமிழகத்தில் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர பிற பகுதிகளில் நாளை முதல் இரவு 10 மணி வரை கடைகள் திறக்கலாம் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு கடைகள் திறக்கும் நேரம் அதிகரிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

    READ MORE
  • ஆகஸ்ட் 10 ஆம் தேதி தமிழகம் முழுவதும் காய்கறி மார்க்கெட் மூடல்!

    கோயம்பேடு மார்க்கெட் மற்றும் மாவட்டங்களில் உள்ள சந்தைகளை திறக்க வலியுறுத்தி ஆகஸ்ட் 10 ஆம் தேதி தமிழகம் முழுவதும் காய்கறி மார்க்கெட் மற்றும் பூ மார்க்கெட் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை திருமழிசையில் உள்ள தற்காலிக சந்தையில் போதுமான இட வசதிகள் இல்லை என வியாபாரிகள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில், கோயம்பேடு மார்க்கெட் மற்றும் மாவட்டங்களில் உள்ள சந்தைகளை திறக்க வலியுறுத்தி ஆகஸ்ட் 10 ஆம் தேதி தமிழகம் முழுவதும் காய்கறி

    READ MORE
  • சென்னையில் மகிழ்ச்சி… கொரோனா பாதித்த 78 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்…!! அமைச்சர் அதிரடி.

    கொரோனா பேரிடரை கருத்தில் கொண்டு குடும்ப அட்டைகள் இல்லாவிட்டாலும் ,வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப் படுவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட வடபழனி பகுதியில், கொரனோ விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முக கவசம் அணிதல், சமூக விலகலை கடைபிடித்தல் ஆகியவற்றை பொதுமக்களிடையே வலியுறுத்தும் விதமாக, கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தனியார் தன்னார்வலர் குழு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நெருப்பில் சாகசம் செய்தல் , தாரை தப்பட்டை

    READ MORE
  • 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கோவை, தூத்துக்குடி, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக உள்மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு