முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • நாளை நமதே… இந்த நாளும் நமதே… மணவிழாவில் பாடல் பாடி அசத்திய அமைச்சர்… கரைபுரண்ட உற்சாகம்..!

    அதிமுக பிரமுகர் இல்ல மணவிழாவில் கலந்துகொண்ட அமைச்சர் கே.சி.வீரமணி எம்.ஜி.ஆர். திரைப்பட பாடல்களை பாடி அசத்தினார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அதிமுக நிர்வாகி ஒருவரது இல்ல திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி மணமக்களை வாழ்த்திவிட்டு அங்கிருந்த கட்சியினருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திருமண வீட்டில் கச்சேரி நடத்திக் கொண்டிருந்த ஆர்கெஸ்ட்ரா குழுவினர் எம்.ஜி.ஆர். திரைப்படத்தில் இடம்பெற்ற நாளை நாமதே, இந்த நாளும் நமதே என்ற பாடலை பாடிக்கொண்டிருந்தனர். இதைக்கேட்ட அமைச்சர்

    READ MORE
  • நேரம் பார்த்து கழுத்தறுத்த அதிமுக..! அதிர்ச்சியில் பாஜக

    திருமாவளவன் பெண்களைப் பற்றி அவதூறாக பேசியதற்கு எதிராக பேசி இதற்கு எதிராக நடக்கவிருக்கும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற நடிகை குஷ்புவை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள். கடந்த மாதம் மனுஸ்மிருதி என்ற நூல் சம்பந்தமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசிய காணொளி ஒன்று வைரலானது அந்த வீடியோவில் திருமாவளவன் பெண்களைப் பற்றி அவதூறாக பேசி இருந்தது சம்பந்தமாக அவர் மீது வழக்குப் பதியப்பட்டது ஆனால் திருமாவளவனோ நான் பெண்களைப் பற்றி தவறாக பேசவில்லை

    READ MORE
  • திருமாவிற்கு ஆதரவாக களமிறங்கிய இயக்குனர்

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் மநுநீதி நூல் குறித்த சர்ச்சைப்பேச்சால் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் அவருக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் தலித்தியவாதியும், திரைப்பட இயக்குநருமான ப.ரஞ்சித் தனது ட்விட்டர் பதிவில், ”மனுவால் குடித்தான் நம் ரத்தத்தை.அறிவால் தொடுத்தார் அவர் (திருமாவளவன்) யுத்தத்தை..! சமரசம் மறுத்து சனாதனம் ஒழி… பவுத்த மார்க்கம் அதை ஏற்றிடு இனி.. இருட்டினை விலக்கிடும் அறிவொளி ஏந்திட புரட்சியாளர் வழி நடப்போம் இனி.!பழமைவாத, சாதி

    READ MORE
  • இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

    தமிழகத்தில், இன்று (செப்.,14), பெட்ரோல் லிட்டருக்கு 84.72 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.12 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.பொதுத் துறையை சேர்ந்த, இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின்

    READ MORE
  • இந்தியன் ஓவர்சீஸ் வட்டி குறைப்பு

    சென்னையைச் சோந்த பொதுத் துறை வங்கியான இந்தியன் ஓவா்சீஸ் பேங்க் எம்சிஎல்ஆா் உடன் இணைக்கப்பட்ட கடனுக்கான வட்டி விகிதங்களை 0.1 சதவீதம் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:எம்சிஎல்ஆா் உடன் இணைக்கப்பட்ட கடனுக்கான வட்டி விகிதம் 0.1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட தங்கநகைக்கு எதிராக வழங்கப்படும் வேளாண் கடனுக்கான(ஏஜிடிஏஜி) வட்டி விகிதத்தையும் 0.6 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட இந்த வட்டி விகிதங்கள் செப்டம்பா் 10-ஆம் தேதியிலிருந்து

    READ MORE
  • இணையவழி பி.எஸ்சி. படிப்புக்கு செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்: சென்னை ஐஐடி தகவல்

    சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ள இணையவழி பி.எஸ்சி. பட்டப்படிப்புக்கு செப்.15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி உருவாக்கியுள்ள பிஎஸ்சி (ஆன்லைன் புரோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ்) இணையவழிப் பட்டப்படிப்பு 2020-21-ஆம் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.ஐஐடியில் பட்டப்படிப்பு பயில ஜேஇஇ நுழைவுத் தோவை மாணவா்கள் எழுதவேண்டும். ஆனால், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிஎஸ்சி இணையவழி பட்டப்படிப்புக்கு ஜேஇஇ தோவு எழுத வேண்டியதில்லை. இந்த இணையவழி பட்டப்படிப்பானது, அடிப்படை பட்டம், டிப்ளமோ பட்டம், இளநிலைப் பட்டப்படிப்பு என

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு