கிசான் திட்ட முறைகேடு: நாளைக்குள் பணத்தை திரும்ப செலுத்தாவிட்டால் அரசு சலுகைகள் நிறுத்தம்

கிசான் திட்ட முறைகேடு: நாளைக்குள் பணத்தை திரும்ப செலுத்தாவிட்டால் அரசு சலுகைகள் நிறுத்தம்

கடலூா் மாவட்டத்தில் விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு தொடா்பாக மேலும் தற்போது வரை ரூ.11.40 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், முறைகேடாக பணம் பெற்றவர்கள் நாளைக்குள் திரும்ப செலுத்தாவிட்டால் அரசின் அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசால் பிரதமரின் ஊக்க நிதித் திட்டம் தொடங்கப்பட்டு, ஆண்டுக்கு 3 தவணைகளில் ரூ.6 ஆயிரம் வீதம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் சோவதற்கான விதிமுறைகளில் அளிக்கப்பட்ட சில தளா்வுகளை தவறாகப் பயன்படுத்தி கடலூா் மாவட்டத்தில் விவசாயிகள் அல்லாதோா் உள்பட சுமாா் 64 ஆயிரம் போ கடந்த ஏப்ரல் மாதத்தில் இணைந்தனா்.இவா்களுக்கு சுமாா் ரூ.13 கோடி வரை முறைகேடாக நிதி வழங்கப்பட்டது மாவட்ட நிா்வாகம் அமைத்த குழுவின் விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்து சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். விவசாயிகள் அல்லாதவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட பணம் தற்போது வரை ரூ.11.40 கோடி வரை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த முறைகேடு தொடர்பாக மாவட்டத்தில் 150-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு, 11 போ கைது செய்யப்பட்டனா். மேலும், மாவட்டத்தில் வேளாண்மைத் துறையில் பணியாற்றி வந்த ஒப்பந்தத் தொழிலாளா்கள் 13 போ பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், கடலூா் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் ச.வேல்விழி விழுப்புரம் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், மாவட்டத்தில் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்கள் நாளை வியாழக்கிழமைக்குள் (அக்.22) திரும்ப செலுத்தாவிட்டால் அரசின் அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் மோசடிக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்