ஒசூரில் மனைவியை கொலை செய்து போலிசில் சரணடைந்த கணவர்

ஒசூரில் மனைவியை கொலை செய்து போலிசில் சரணடைந்த கணவர்

ஒசூரில் குடும்பதகராறில் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன், போலிசில் சரணடைந்துள்ளார்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் லட்சுமிநாராயண நகரில் வசித்து வருபவர் மணிகண்டன்(30), சிந்துஜா(27) இவர்களுக்கு 3 வயதில் பெண்குழந்தை இருந்து வருகிறது.

மணிகண்டன் மாமியார் வீட்டில் வசித்து வரும்நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பதகராறு இருந்து வந்துள்ளது.

நேற்று கேஜிஎப் பகுதியில் உறவினரின் துக்க நிகழ்வில் பங்கேற்க காரில் மாமியர் குடும்பத்தினர் சென்றுவிட மனைவியை தீர்த்துக்கட்ட சரியான நேரத்தை எதிர்ப்பார்த்திருந்த மணிகண்டனுக்கு சாதகமாகி உள்ளது.

நேற்றிரவே மணிகண்டன் ஒசூர் வெங்கடேச நகரில் கத்தியை வாங்கி வந்து படுக்கையறையில் வைத்ததாகவும்,

கணவன் மனைவி இருவரும் இரவு தனிமையில் இருந்தநிலையில் காலை மணிகண்டன் சிந்துஜாவை படுக்கையிலேயே மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்து அட்கோ போலிசில் சரணடைந்தார்.

பின்னர் அட்கோ போலிசார், ஒசூர் டிஎஸ்பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்ததில் படுக்கையிலேயே அறைகுறை ஆடைகளுடன் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார்.

உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மணிகண்டனிடம் போலிசார் விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்