முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • கல்பனா சாவ்லா விருது..! விண்ணப்பங்கள் வரவேற்பு..!

    சென்னை: தமிழக அரசின் துணிவு மற்றும் வீர சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு, தகுதியுடைய பெண்கள் ஜூன் 30ம் தேதிக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விருதுக்கான தகுதியானவர்களை தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தேர்வுசெய்யப்படுவார்கள் என தமிழக அரசு அளிவித்துள்ளது. கல்பனா சாவ்லா விருது என்பது ஆண்டுதோறும் தமிழக அரசு அளிக்கும் விருதுகளில் ஒன்றாகும். இந்தியாவில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்ற விண்வெளி வீரங்கனை கல்பனா சாவ்லாவின் நினைவாக தமிழ்நாட்டில்

    READ MORE
  • ‘‘ராகுல் பதவி விலகக்கூடாது’’ காங்., நிர்வாகி தீக்குளிக்க முயற்சி..!

    சேலம்: ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகக்கூடாது என காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்ததையடுத்து, ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய உறுதியுடன் இருப்பதால், பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சேலம் அருகே பச்சப்பட்டி பகுதியை சேர்ந்த பழனி என்பவர் சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பதவி வகித்து வருகிறார். இவர் சேலம்

    READ MORE
  • ஏடிஎம்மில் தீவிபத்து; ரூ.7 லட்சம் சாம்பல்..!

    அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் தனியார் ஏடிஎம் மெஷினில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதில், ரூ.7 லட்சம் சாம்பலானது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மதுரை மெயின் ரோடில், எச்டிஎஃப்சி வங்கியின் ஏடிஎம் அமைந்துள்ளது. இந்த ஏடிஎம்மில் அதிகாலை 5 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவலின்பேரில் அங்கு விரைந்த தீயணைப்பு மீட்டு குழுவினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனையடுத்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆனால், அதில் வைத்திருந்த பணம் எவ்வளவு என்பது அதிகாரிகள் வந்த பிறகுதான் தெரியவந்தது. இதில், ரூ.7

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு