முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • கணவன் கண் முன்பே மனைவி பரிதாப பலி..!

    திருப்பத்தூர்: வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் லாரி மோதி கணவன் கண் எதிரே மனைவி பரிதாப உயிரிழந்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் செந்தில்குமார் மற்றும் அவருடைய மனைவி மேரி என்கின்ற மலர்கொடி. இவர்கள் இருவரும் 2 நாட்களுக்கு முன்பாக திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள தங்கள் உறவினர் வீட்டிற்கு வந்துள்ளனர். மதிய உணவு சாப்பிடுவதற்காக பைக்கில் இரண்டு பேரும் பைக்கில் வந்துள்ளனர். அப்போது, லாரி ஒன்றை கடக்க முயற்சித்தபோது, நிலைதடுமாறி லாரியில் இடித்ததால், பைக்கின்

    READ MORE
  • கோவில் பணியாளர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு!

    சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில் பணியாளர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், பணியாற்றும் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 148 சதவீதத்திலிருந்து 154 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் பட்டியலிட்டு வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

    READ MORE
  • மத்திய அமைச்சராகிறார் ரவீந்திரநாத் குமார்!

    சென்னை: தேனி மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்றுள்ள அதிமுகவின் ஒரே எம்.பி.,யான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை உறுதிசெய்யும் வகையில், பிரதமர் அலுவலகத்திலிருந்து ரவீந்திரநாத் குமாருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு