முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • குட்கா, பான் மசாலாவுக்கு ஓராண்டு தடை நீட்டிப்பு!

    சென்னை: தமிழகம் முழுவதும் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு, தமிழக உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிகளின் கீழ் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து, குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களை தயாரிக்கக்கூடாது என்றும், விநியோகிக்க மற்றும் விற்பனை செய்யவும் தமிழகத்தில் தடை விதித்திருந்தது.

    READ MORE
  • மகளுக்கே பாலியல் கொடுமை..! பைனான்சியர் கொலையில் திடீர் திருப்பம்..!!

    அலங்காநல்லூர்: பைனான்சியர் கொலையில், மகளையே பாலியல் தொந்தரவு கொடுத்ததால், அவரது 2வது மனைவியே கூலிப்படையை வைத்து கொன்றது அம்பலமாகியுள்ளது. மதுரை அடுத்த அலங்காநல்லூர் நடராஜ்நகரைச் சேர்ந்தவர் பைனான்சியர் இளங்கோவன். இவர் கடந்த வெள்ளியன்று தனது வீட்டிலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், 2வது மனைவிஅபிராமியே கூலிப்படையை ஏவி கொலை செய்தது சிசிடிவி கேமரா மூலம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து நடந்த விசாரணையில், தன்னுடைய மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துவந்ததால் இந்த கொலையை அரங்கேற்றியுள்ளனர்.

    READ MORE
  • அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை..!

    சென்னை: தமிழகத்தின் சில இடுங்களில் அடுத்த 24 மசணி நேரத்தில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், தற்போது நிலவிவரும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு, உள் தமிழகம் மற்றும் தென் தமிழகம் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடனும் காணப்படும். அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ்

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு