முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • ஒரு லட்சம் மரக்கன்று நடும் திட்டம்; துவக்கிவைத்த புதுச்சேரி முதல்வர்!

    புதுச்சேரி: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி துவக்கிவைத்தார். ஈஷா பசுமை கரங்கள் சார்பில், புதுச்சேரி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 50 லட்சம் மரக்கன்றுகளை நட கடந்த 2019ம் ஆண்டு திட்டமிட்டது. இந்நிலையில் பாரதி பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவகொழுந்து உள்ளிட்டோர் மரக்கன்றுகள் நட்டு, திட்டத்தை தொடங்கிவைத்தனர்.

    READ MORE
  • தொழிலதிபர் மகன் பிறந்த நாள்..! தாழ்வாக பறந்த ஹெலிகாப்டரால் பரபரப்பு!!

    கும்பகோணம்: கும்பகோணத்தில் தொழிலதிபர் மகன் பிறந்தநாள் விழாவுக்காக தாழ்வாக பறந்த ஹெலிகாப்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கும்பகோணத்தில் தொழிலதிபரின் மகன் பிறந்தநாளுக்காக, திருமண மண்டபம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், மண்டபத்தின் மேலே ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து மலர் தூவியுள்ளது. திடீரென பறந்துவந்த ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்ததால், அப்பகுதி மக்கள் என்னவென்று தெரியாமல் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கும்பகோணம் கோட்டாட்சியர் தகவலின் பேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

    READ MORE
  • ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை… பிரச்னையை கிளப்பும் பீட்டா..!

    புதுடெல்லி: மாடுகளின் வால்கள் கடிக்கப்படுவதாகவும், மூக்கில் ரத்தம் வடிவதாகவும் ஜல்லிக்கட்டு குறித்து மீண்டும் புதிய பிரச்னையை கிளப்பும் வகையில், பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடுகள் தாக்குதலுக்கு உள்ளாவது குறித்து, 73 பக்க அறிக்கையை பீட்டா தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடுகள் தாக்கப்படுவது குறித்து தெரிவித்துள்ளது. பீட்டா அமைப்பின் சார்பில், ஏற்கெனவே ஜல்லிக்கட்டு தடை விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கால், சென்னை மெரினாவில் இளைஞர்களின் போராட்டம் வீரியமடைந்து, உலகம் முழுவதும்

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு