தொழிலதிபர் மகன் பிறந்த நாள்..! தாழ்வாக பறந்த ஹெலிகாப்டரால் பரபரப்பு!!

தொழிலதிபர் மகன் பிறந்த நாள்..! தாழ்வாக பறந்த ஹெலிகாப்டரால் பரபரப்பு!!

கும்பகோணம்:

கும்பகோணத்தில் தொழிலதிபர் மகன் பிறந்தநாள் விழாவுக்காக தாழ்வாக பறந்த ஹெலிகாப்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் தொழிலதிபரின் மகன் பிறந்தநாளுக்காக, திருமண மண்டபம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், மண்டபத்தின் மேலே ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து மலர் தூவியுள்ளது.

திடீரென பறந்துவந்த ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்ததால், அப்பகுதி மக்கள் என்னவென்று தெரியாமல் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கும்பகோணம் கோட்டாட்சியர் தகவலின் பேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்