முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • ‘‘தலைமையின் முடிவே இறுதி; தேவையற்ற கருத்துகளை பதியவேண்டாம்’’ – ரவீந்திரநாத் குமார்

    சென்னை: மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தேனி தொகுதி எம்.பி., ரவீந்திரநாத் குமார் ஏமாற்றத்தை சந்தித்தார். இந்நிலையில், இதுகுறித்து ரவீந்திரநாத் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது. எனவே தேவையற்ற கருத்துகளை யாரும் பதவிட வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய கடமை தனக்கு இருப்பதால் தங்கள் பகுதியில் உள்ள நிறை குறைகளை தனக்கு தெரியப்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.

    READ MORE
  • ‘‘இந்தி மொழி ‘கட்டாயம்’ என்பது ‘திணிப்பு’ என்று பொருள்’’ – ப.சிதம்பரம்

    சென்னை: இந்தி மொழி கட்டாய பாடம் என்றால் இந்தி திணிப்பு என்று பொருள் தான் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் 8ம் வகுப்பு வரையில், கன்னடா, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒன்றை இரண்டு ஆண்டுகள் பயிலவேண்டும் என மத்திய அரசு வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ‘‘பள்ளிகளில் மும்மொழித் திட்டம் என்றால் என்ன அர்த்தம்? இந்தி

    READ MORE
  • 24 நேரமும் கடைகள் திறக்கலாம்; 3 ஆண்டுகள் நீட்டித்து தமிழக அரசு அனுமதி!

    சென்னை: தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், திரையரங்குகள், வங்கிகள், மருத்தகம் மற்றும் வணிக நிறுவனங்கள் திறந்திருக்க தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது. இந்த அனுமதி ஓராண்டுகாலம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், இரவு நேரத்தில் பெண் ஊழியர் நியமிக்கப்பட்டால் அவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை பின்பற்ற உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு