முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • மோடி அமைச்சரவையில் தமிழகம் புறக்கணிப்பு.. கே.எஸ்.அழகிரி.!

    மத்திய அமைச்சரவையில் தமிழகம் உள்நோக்கத்துடன் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடியுடன் 57 மத்திய அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர். பாஜகவோடு கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக சார்பில் யாருக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கவில்லை. மக்களவையில் ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றிருந்தாலும் ஏற்கெனவே மாநிலங்களவையில் 13 உறுப்பினர்களை அதிமுக பெற்றிருக்கிறது. இவர்களது ஆதரவு என்பது பாஜகவுக்கு அவசியமாகும். ஆனாலும், அதிமுகவிலிருந்து எவரையும் மத்திய அமைச்சரவையில் சேர்க்காமல்

    READ MORE
  • தமிழகத்தில் 100 டிகிரி தாண்டிய வெப்பம்!

    சென்னை: கத்திரி வெயில் முடிந்த நிலையிலும், தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சில இடங்களில் மிதமான மழை பெய்தும் வெப்பம் தணிந்ததில்லை. இந்நிலையில், தமிழகத்தில் 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியள்ளது. வேலூர், திருத்தணி – 108, மதுரையில் 105, பாளையங்கோட்டை, மதுரை தெற்கு – 104, கடலூரில் 103, திருச்சி, சென்னை மீனம்பாக்கத்தில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    READ MORE
  • முந்திரி தோட்டத்துக்கு சென்ற கூலி தொழிலாளியை தாக்கிய கரடி.!

    கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன் புதூர் சமத்துவ புரத்தை சேர்ந்தவர் தேவசகாயம். இவர் கூலி தொழிலாளியாக இருந்து வருகிறார். இந்நிலையில், முந்திரி பழம் பறிப்பதற்காக தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது புதரில் இருந்த கரடி தேவசகாயம் மீது தாக்கியுள்ளது. இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து தப்பிபதற்காக கூச்சல் போட்டுள்ளார். இதனை கவனித்த மற்ற தொழிலாளிகள் ஓடி வந்து கரடியை விரட்டியடித்து தேவசகாயத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு