‘‘இந்தி மொழி ‘கட்டாயம்’ என்பது ‘திணிப்பு’ என்று பொருள்’’ – ப.சிதம்பரம்

‘‘இந்தி மொழி ‘கட்டாயம்’ என்பது ‘திணிப்பு’ என்று பொருள்’’ – ப.சிதம்பரம்

சென்னை:

இந்தி மொழி கட்டாய பாடம் என்றால் இந்தி திணிப்பு என்று பொருள் தான் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நாடுமுழுவதும் 8ம் வகுப்பு வரையில், கன்னடா, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒன்றை இரண்டு ஆண்டுகள் பயிலவேண்டும் என மத்திய அரசு வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ‘‘பள்ளிகளில் மும்மொழித் திட்டம் என்றால் என்ன அர்த்தம்? இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்குவார்கள் என்று பொருள். இந்தி மொழி கட்டாயப் பாடம் என்றால் இந்தி திணிப்பு என்று பொருள்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘‘பாஜக தேர்தல் அறிக்கையிலேயே இந்தி திணிப்புக்கு கொடி அசைத்திருந்தார்கள் என்பதை நான் தேர்தலின் போதே சுட்டிக் காட்டியிருந்தேன். சமஸ்கிருத மொழியைப் பரப்புவோம் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. இந்த முயற்சிக்கு தேர்தல் அறிக்கை சூட்டிய தலைப்பு ‘பாரதிய மொழிக் கலாச்சாரம்’ஆகும்’’ என அந்த டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்