முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • சிவாஜிகணேசன் நிலைதான் ஏற்படும்

    ஓமலூர்: சிவாஜிகணேசன் நிலைதான் கட்சி தொடங்கும் நடிகர்களுக்கு ஏற்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தன்னாட்சி பெற்ற அமைப்பு; இதில் அரசுக்கு தொடர்பு இல்லை. கால அளவு குறைவாக இருப்பதால் விருப்ப மனு அறிவிப்பு வெளியிடப்பட்டது என முதல்வர் தெரிவித்தார். மேலும், வயதாகிவிட்டதால் சினிமாவில் வாய்ப்பு குறைந்துவிட்டது, அதனால் சிலர் அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கின்றனர். சிவாஜிகணேசன் நிலைதான் கட்சி தொடங்கும் நடிகர்களுக்கு ஏற்படும் எனவும் அவர்

    READ MORE
  • டிரைவருடன் தீயில் கருகிய கார்

    ஒசூர்: ஓசூர் அருகே டிப்பர்லாரி – கார் மோதியதில், தீப்பற்றி எரிந்து கார் டிரைவர் கருகி பலியானார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து இராயக்கோட்டையை நோக்கி டிப்பர் வாகனமும், இராயக்கோட்டையிலிருந்து ஓசூரை நோக்கி காரும் வந்துக்கொண்டிருந்தபோது, ஓசூர் – இராயக்கோட்டை மாநில நெடுஞ்சாலை சானமாவு என்னுமிடத்தில் எதிர்பாராத விதமாக நேருக்குநேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது. காரினுள் ஓட்டுநர் இருக்கையில் ஒருவரும், பின்புறமாக பெண் மற்றும் குழந்தை அமர்ந்து வந்துள்ளனர். இரண்டும் மோதிக்கொண்டபோது கார் தீப்பற்றி எரிய தொடங்கியதும் பெண், குழந்தை

    READ MORE
  • நுரையுடன் நீர்; விவசாயிகள் கவலை

    ஓசூர்: கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து குறைவாக உள்ளநிலையிலும், நுரையுடன் வெளியேறும் நீரால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி நீர்தேக்க அணை 44.28 கனஅடி முழுக்கொள்ளவை கொண்டது. கர்நாடக மாநிலம் தென்பெண்ணை உற்ப்பதியாகும் நந்திமலையிலிருந்து வரும் நீரானது பெங்களூரு மாநகரம், ஓரத்தூர் ஏரி வழியாக கொடியாளம் தடுப்பணையை தொட்டு தமிழகம் வருகிறது. கெலவரப்பள்ளி அணையில் நீர் சேமிக்கப்பட்டு பாசனத்திற்காக கால்வாய்கள் வழியாகவும், பல்வேறு மாவட்டங்களுக்கு தென்பெண்ணை ஆற்றின் வழியாகவும் திறந்து விடப்படுகிறது. கர்நாடகா

    READ MORE
  • அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் நாளை மறுநாள் பதவியேற்பு!

    சென்னை: தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் நாளை மறுநாள் 29ம் தேதி பதவியேற்க உள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் தமிழக சட்டசபை தேர்தல் 18 தொகுக்கும், பின்னர் 4 தொகுகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இதில் 13 தொகுதிகளில் தி.மு.க.,வும், 9 தொகுதிகளில் அ.தி.மு.க.,வும் வெற்றிபெற்றது. இந்நிலையில், வெற்றிபெற்ற அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் 9 பேரும் வரும் 29ம் தேதி தலைமை செயலகத்தில் சபாநாயகர் அறையில் பதவியேற்கவுள்ளனர். இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற திமுக எம்.எல்.ஏ.,க்கள் நாளை பதவியேற்க உள்ளது

    READ MORE
  • ரூ.1.56 கோடி பணத்தை வீசிவிட்டு சென்ற மர்மநபர்கள்..! போலீசார் விசாரணை..!!

    சென்னை: சென்னையில் ரூ.1.56 கோடியை போலீசார் துரத்தியதால் மர்ம நபர்கள் வீசிச்சென்றுள்ளனர். சென்னை, கோட்டூர்புரம் அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது, பைக்கில் வந்த சந்தேகத்திற்கிடமான நபர்களை சோதனையிட முயன்றபோது, கையில் வைத்திருந்த பையை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். போலீசார் அந்த பையை சோதனையிட்டபோது, ரூ 1.56 கோடி பணம் இருந்தது தெரியவந்தது. எதற்காக இந்த பணம் எடுத்துச்செல்லப்பட்டது. ஏன் அவர்கள் தப்பியோடினர் என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

    READ MORE
  • திமுக எம்எல்ஏ.,க்கள் வரும் நாளை மறுநாள் பதவியேற்பு!

    சென்னை: தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற திமுக எம்.எல்.ஏ.,க்கள் நாளை மறுநாள் 28ம் தேதி பதவியேற்க உள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் தமிழக சட்டசபை தேர்தல் 18 தொகுக்கும், பின்னர் 4 தொகுகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இதில் 13 தொகுதிகளில் தி.மு.க.,வும், 9 தொகுதிகளில் அ.தி.மு.க.,வும் வெற்றிபெற்றது. இந்நிலையில், வெற்றிபெற்ற தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் 13 பேரும் வரும் 28ம் தேதி தலைமை செயலகத்தில் சபாநாயகர் அறையில் பதவியேற்கவுள்ளனர். இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு