முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

 • பெண் செய்தியாளரை சீண்டிய அமைச்சர் கைது

  ஜார்ஜியா: அமெரிக்காவில் பெண் செய்தியாளரை சீண்டிய அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் ஜார்ஜியாவில் நடந்த மாரத்தான் போட்டியில், அலெக்ஸ் போஜார்ஜியன் என்ற பெண் செய்தியாளர் நேரலையில் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார். அப்போது, போட்டியாளர்களில் சிலர் கேமராவின் முன் பாவனை செய்துகொண்டிருந்தனர். அப்போது திடீரென அவரது பின்புறத்தை ஒருவர் தட்டிவிட்டு சென்றார். இதனையடுத்து, வீடியாவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஜார்ஜியாவின் இளஞர் நலத்துறை அமைச்சர் தாமஸ் கால்வே என்பது தெரியவந்தது. இதனையடுத்து, புகாரின் பேரில் தாமஸ் கால்வேவை

  READ MORE
 • நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு; பணிகள் தீவிரம்

  புதுடெல்லி: நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு வரம் 16ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது. டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், 4 குற்றவாளிகளின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு தூக்குத் தண்டனை உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில், குற்றம் நடைபெற்ற 7 ஆண்டுகளுக்கு பின்னர் திகார் சிறையில் உள்ள 4 குற்றவாளிகளுக்கு வரும் 16ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது. தூக்கு தண்டனையை நிறைவேற்ற 2 பேரை உத்தரப்பிரதேசம் திகார் சிறைக்கு அனுப்புகிறது.

  READ MORE
 • வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ‘பிஎஸ்எல்வி சி48’

  ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோவின் பூமி கண்காணிப்பு செயற்ககோள் மற்றும் 9 வெளிநாட்டு செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி48 ராக்கெட் இன்று மாலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’, பூமிய கண்காணிக்க ‘ரிசாட் 2பிஆர்1’ செயற்கைகோளை தயாரித்தது. இந்த செயற்கைகோளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து பிஎஸ்எல்வி சி48 ராக்கெட் மூலம் இன்று மாலை 3.25 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளை

  READ MORE
 • 38 பேருடன் விமானம் மாயம்

  சிலி: அண்டார்டிகாவிலிருந்து 38 பேருடன் புறப்பட்டு சென்ற ராணுவ விமானம் மாயமனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்அமெரிக்காவின் சிலி நாட்டு தென் பகுதியிலிருந்து நேற்று அண்டார்டிகா விமானப்படை தளத்துக்கு ராணுவ விமானம் ஒன்று 38 பேருடன் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சி130 ரக ஹெர்குலஸ் வகையை சேர்ந்த ராணுவ விமானம் மாயமாகியிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது எனவும், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என சிலி நாட்டு அதிபர்

  READ MORE
 • கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து

  ஒசூர்: கிருஷ்ணகிரி அருகே கண்டெய்னர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கிருஷ்ணகிரி அடுத்த காவேரிப்பட்டினம் அருகே உள்ள பெத்தாபுரம் என்ற கிருஷ்ணகிரி சேலம் தேசிய நெடுஞ்சாலையில், டெல்லியிலிருந்து சேலத்திற்கு ‘போலோ மிட்டாய்’ கன்டெய்னர் லாரி ஏற்றி வந்தது. லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. தகவலறிந்த காவேரிப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்தனர்.

  READ MORE
 • பட்டப்பகலில் ஏடிஎம்பில் கொள்ளை

  ஒசூர்: தேன்கனிக்கோட்டையில் பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது, பீகார் மாநிலம் துவாநா பாகி நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது ஏசன் ஆலம் என்பவர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள இந்தியா ஏடிஎம் ஈடுபட்டுள்ளார்,பகல் நேரம் என்பதால் அங்கு இருந்த பொதுமக்கள் பார்த்து அவனைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் ஏடிஎம் உடைத்துள்ளார் பணம் எதுவும் கொள்ளை போகவில்லை

  READ MORE
 • கெலமங்கலம் ஒன்றியத்தில் ஏராளமானோர் மனுதாக்கல்

  ஒசூர்: ஒசூர் அடுத்த கெலமங்கலம் ஒன்றியத்தில் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 28 ஊராட்சி மன்றங்களுக்கு தலைவர் பதவிக்கும், ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கும் இன்று 4வது நாளாக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இன்று பைரமங்கலம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு பிரதிமா கோபாலரெட்டி, தொட்ட மெட்டறை பஞ்சாயத்தில் யசோதா உட்பட ஊடேதுர்க்கம், குந்துமாரணப்பள்ளி ஆகிய பஞ்சாயத்துக்களை சேர்ந்தோர் வேட்புமனுக்களை செய்து வருகின்றனர்.

  READ MORE
 • திமுகவிலிருந்து வெளியேறிய பழ.கருப்பையா

  சென்னை: முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா திமுகவிலிருந்து விலகியுள்ளார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், முன்னாள் எம்எல்ஏவான பழ.கருப்பையா அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்தார். தற்போது திமுகவிலிருந்து பழ.கருப்பையா விலிகியுள்ளார். விலகியதற்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

  READ MORE
 • 8 மாநகராட்சி மகளிருக்கு இடஒதுக்கீடு

  சென்னை: தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் மேயர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், வேலூர் (பட்டியலினம்), தூத்துக்குடி (பட்டியலின பொது), திருச்சி, நாகர்கோவில், திண்டுக்கல், திருநெல்வேலி, மதுரை, கோவை மற்றும் ஈரோடு ஆகிய 7 மாநகராட்சிகளுக்கு மகளிருக்கு ஒதுக்கப்பட்டள்ளது. இந்நிலையில் மொத்தமாக 8 மாநகராட்சிகளில் மகளிருக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  READ MORE
 • 9 மாவட்டத்தில் தேர்தல் நிறுத்தியது மரண அடி

  சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நிறுத்தியது அதிமுகவுக்கு மரண அடி என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த திமுக தலைவர் ஸ்டாலின், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பு இன்னும் முழுமையாக வெளிவரவில்லை, தீர்ப்பு குறித்து பல்வேறு தகவல்கள் பரப்பப்படுகின்றன என அவர் தெரிவித்தார். மேலும், 9 மாவட்டங்களில் தேர்தலை உச்சநீதிமன்றம் நிறுத்தியது, அதிமுகவுக்கும், அரசுக்கும் கிடைத்த மரண அடி எனவும், மக்களை சந்திக்க திமுக

  READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு